Home பெண்கள் தாய்மை நலம் தாய்ப்பால் தரும்போது உடலுறவு கொள்ளலாமா?

தாய்ப்பால் தரும்போது உடலுறவு கொள்ளலாமா?

34

கர்ப்பத்தை கடந்து குழந்தையை ஈன்றெடுக்கும் தாய்மார்களின் மிகவும் முக்கிய பணியாக அமைவது குழந்தைக்கு தாய்ப்பால் தருவது தான். இந்நிலையில் உடலுறவு கொள்ளலாமா எனும் குழப்பம் ஒரு சில தம்பதியருக்கு ஏற்படுகிறது. ஒருசிலர் தாய்ப்பால் தரும் காலங்களில் உடலுறவில் ஈடுபட முடியவில்லை எனவும் கூறுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் உங்களுக்கு ஏற்படும் அசதி தான். ஆம், தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு உடலில் சக்தி என்பது கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அத்துடன் தாய்ப்பால் தருவதால் உங்களுடைய உடல் சத்துக்கள் குழந்தைக்கு செல்கிறது. இதனால் தான் உடலுறவில் ஈடுபட முடியாத நிலை என்பது தாய்ப்பால் தரும்போது உண்டாகிறது.

ஒருசில பெண்களுக்கு தாய்ப்பால் தரும்போது உடலுறவில் ஈடுபாடு அற்றும் இருக்கக்கூடும்.

வேறு என்ன காரணம்?
ஒரு சில தாய்மார்கள், தான் குழந்தையை பெற்ற அந்த அனுபவத்திலிருந்து வெளியில் வராமல் இருப்பார்கள். அதனால் உடலுறவில் ஈடுபாடு என்பது குறைவாக காணக்கூடும்.

என்ன நடக்கிறது?
தாய்ப்பால் சுரக்க இரண்டு ஹார்மோன்கள் உதவ, இதே ஹார்மோன்கள் உடலுறவு நாட்டத்தையும் குறைக்கிறது.

முதல் ஹார்மோன் ஆக்சிடோசின் என அழைக்கப்பட, தாய்ப்பால் சுரக்கவும் இந்த ஹார்மோன் உதவுகிறது. இதனை காதல் ஹார்மோன் என்றும் அழைப்பர். அதாவது உணர்வுகளை இந்த ஹார்மோன்கள் தூண்டும் போதும் புதிய அம்மாக்களுக்கு செக்ஸில் அவ்வளவு ஆர்வம் இருப்பதில்லை.

இரண்டாவது ஹார்மோனின் பெயர் எஸ்ட்ரோஜன் ஆகும். இதுவும் தாய்ப்பால் தரும் நிலையில் ஏற்படக்கூடிய செக்ஸ் உணர்வை கட்டுப்படுத்துகிறது. ஆனாலும், தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு இந்த ஹார்மோன் குறைவாகவே சுரக்கிறது. இது அண்டவிடுப்பை தந்து செக்ஸ் ஆர்வத்தை குறைப்பதோடு பிறப்புறுப்பை வறண்டு காணப்படவும் செய்கிறது. இதனால் புதிய அம்மாக்களுக்கு உராய்வு நீக்கி என்பது கண்டிப்பாக தேவைப்படுகிறது.

ஒரு புதிய ஆய்வின் படி, புதிய குழந்தை பிறப்பால் புதிய அப்பாக்களும் ஹார்மோன் மாற்றங்களால் பாதிக்கப்படுவதாக சொல்கிறது.

போதிய தூக்கமின்மை:
தாய்ப்பால் தரும் தாய்மார்கள் சரியாக தூங்க வேண்டும். இல்லையேல், செக்ஸில் ஆர்வம் என்பது குறைவாக காணப்படக்கூடும்.

மார்பக காம்பில் வலி:
தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு தொடக்கத்தில் மார்பக காம்பில் வலி என்பது காணப்படும். இதனால் உடலுறவில் ஈடுபடுவது மிகவும் சிரமமான விஷயமாக அமைகிறது.

இந்த பிரச்சனை தீருமா?
கவலை வேண்டாம். இந்த பிரச்சனை என்பது போக போக தானாகவே சரியாகிவிட, கணவருடன் உடலுறவு கொள்வதிலும் சிக்கலின்றி அமைகிறது. ஆனால், கண்டிப்பாக காத்திருக்க வேண்டியது அவசியம். தாய்ப்பால் தருவது மட்டுமே உங்கள் செக்ஸ் ஈடுபாடு குறைய காரணமாக அமைவதில்லை. போதிய தூக்கமின்மையும் ஒரு காரணமாக அமைகிறது.

அதனால் இந்த மாறுதல்களை ஏற்றுக்கொண்டு, காலம் கனியும் வரை காத்திருந்து உங்கள் கணவருடன் மீண்டும் உடலுறவு கொள்ளலாம். ஒருசில பெண்கள் தாய்ப்பால் தரும்போதும் உடலுறவில் ஈடுபடுவார்கள். அது அவர்களுடைய மன நிலையை பொறுத்தே அமைகிறது.