Home ஜல்சா கணவனிடம் சொந்த மகளை பலாத்காரம் செய்ய சொன்ன கொடூர தாய்

கணவனிடம் சொந்த மகளை பலாத்காரம் செய்ய சொன்ன கொடூர தாய்

21

இங்கிலாந்து நாட்டில் தனது சொந்த மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்க தனது இரண்டாவது கணவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் பெண் ஒருவர். இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

இங்கிலாந்தின் வார்விஷைர் நகரில் 12 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வந்தார். தாய் தனது முதல் கணவரை பிரிந்து இரண்டாவது கணவரை திருமணம் செய்துகொண்டு மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

அவர் ஏற்கனவே கருத்தடை செய்து கொண்டதால், இரண்டாவது கணவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அவரது கணவர் தனக்கு வாரிசு வேண்டும் என பிடிவாதமாக இருந்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் தனது மகளை கர்ப்பமாக்கி குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு தனது கணவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கு சம்மதம் தெரிவித்து அந்த நபரும் தனது மகளாக பார்க்க வேண்டிய 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து பலமுறை தனது மனைவியின் துணையுடன் அந்த சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார் அவர். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார்.

இந்த விவகாரம் வெளியே யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர் அவர்கள். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததன் மூலம் பெற்றோரின் இந்த கொடூர செயல் வெளியே தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கிடைத்து, உடனே வந்து பெற்றோரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இதன் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியின் தாய்க்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.