Home சூடான செய்திகள் தம்பதியினர் உடல் பருமனால் ஏற்படும் கட்டில் சுவாரசிய தகவல்

தம்பதியினர் உடல் பருமனால் ஏற்படும் கட்டில் சுவாரசிய தகவல்

129

சூடான செய்திகள்:ஒரு புதிய ஆய்வில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் ஜோடிகள் எடை அதிகரிப்பை பெறுகின்றனர் என்று தகவலை வெளியிட்டுள்ளது. இது அன்பான உறவில் இருப்பதும் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தியுள்ளது. நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும் நீங்களும் உங்கள் துணையும் ஒருவருக்கொருவர் சந்தோஷமாக அன்புடன் காதல் செய்து வந்தால் உங்கள் எடையில் சில பவுண்ட் கூடியிருக்கும் என்று இந்த ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவருக்கொருவர்
இருவரும் ஒன்றாக வளர்ந்து காதலில் இருக்கும் ஜோடிகள் ஒண்ணுக்குள் ஒண்ணாக மாறி விடுகிறார்கள். வெளி உலகத்திற்கு பார்க்கும் போது இருவரும் ஒருவர் என்பது போல் அவர்களின் நடத்தை, செயல்கள் மற்றவர்களுக்கு தோன்றும். இதற்கு காரணம் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்த அதீத அன்பு தான் காரணம். அவர்கள் தங்களை சரி செய்யும் வழிகளும் ஒன்றாகவே இருக்கும்.

வளர்ந்து வரும் ஆராய்ச்சிகள் சில வளர்ந்து வரும் ஆராய்ச்சி தகவல்களின் கருத்துப்படி உறவில் இருப்பவர்களையும் தனியே இருப்பவர்களையும் ஒப்பிடும் போது உறவில் இருப்பவர்களின் எடை கணிசமாக உயர்ந்துள்ளதை காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சியின் முடிவு இந்த ஆராய்ச்சியின் முடிவானது நம்ப முடியாத அளவு இருந்தது. மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் தம்பதிகளின் எடை அதிகரிக்கிறது என்ற முடிவு தெரியவந்தது. உறவில் ஈடுபடுவதற்கு முன் இருந்த எடையை விட சில தம்பதிகள் 5 கிலோ கிராம் வரை எடை அதிகரித்து இருந்தனர்.

உண்மை டல்லாஸில் உள்ள தெற்கு மெத்தடிஸ்ட் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட நான்கு வருட ஆராய்ச்சியில் கிட்டத்தட்ட 169 ஜோடிகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர். இதற்கான சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அந்த ஜோடிகளுக்கு எடை அதிகரித்துள்ளது என்பது உண்மை தான் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

வியத்தகு மாற்றங்கள் திருமண உறவில் ஈடுபட்ட பிறகு தம்பதிகள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டு ஒன்றாக சேர்ந்து தங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டு வாழ்வதால் வியத்தகு மாற்றங்களை சந்திக்கின்றனர். தனிப்பட்ட வாழ்க்கை முறை மாறி ஒரு புத்தகத்தில் இருக்கும் ஒரு பக்கத்தை போல ஒன்றாக வாழ்க்கை நடத்துகிறார்கள்.

சந்தோஷம் அவர்களின் வாழ்க்கை முறை மாறும் போது அவர்களுக்கே தெரியாமல் இந்த எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. அன்பில் ஏற்படும் பூரிப்பு, சந்தோஷம் போன்றவை ஜோடிகளின் எடை அதிகரிப்பை தூண்டுகிறது.

மற்ற காரணங்கள் நாம் திருமண உறவில் ஈடுபடாமல் தனியாக வாழும் போது நிறைய வேலைகளை நாம் ஒருத்தராக செய்ய வேண்டும். உடல் ரீதியாக நிறைய நேரம் செலவிடுவோம். அதுவே தம்பதிகளாக நகரும் வாழ்க்கையில் வேலைகளை பிரித்து கொண்டு பயணிக்கிறார்கள். வெளியில் சென்று நீண்ட நேரம் உணவருந்துதல், திரைப்படம் பார்ப்பது, அன்பை பரிமாறுவது போன்ற செயல்களும் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமையலாம் என்கின்றனர்.

தனிப்பட்ட வாழ்க்கை மேலும் நாம் சிங்கிளாக வாழும் சமயத்தில் எதிர்பாலினரை ஈர்க்க நம் உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க முயலுவோம். உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுவோம். நமது உடல் நலம் மற்றும் உடலை கச்சிதமாக வைக்க நிறைய நேரத்தை மற்றவர் ஈர்ப்பை பெற மெனக்கெடுவோம்

அழுத்தம் குறைதல் ஆனால் ஒரு அன்பான உறவில் நீங்கள் ஈடுபட்டதும் உங்கள் உடலமைப்பு மீதான அழுத்தம் குறைகிறது. நீங்கள் எப்படி இருந்தாலும் அந்த உறவு நீடிக்கும் என்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைக்க அழுத்தம் இருப்பதில்லை. இதனாலும் உங்கள் எடை கணிசமாக கூட வாய்ப்பிருக்கிறது. மேலும் உங்கள் உணவுப் பழக்கம், தூங்கும் பழக்கம் என தினசரி முறைகளில் கூட சில பழக்க வழக்கங்கள் கொஞ்சம் மாறியிருக்கும். இந்த மாறுபட்ட வாழ்க்கை முறையும் ஜோடிகளில் எடை அதிகரிப்புக்கு காரணமாக அமைகிறது. உங்கள் அன்பும் பாசமும் எடை அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.

நேரத்தை செலவிடுங்கள் அன்பான ஜோடிகளே நீங்கள் எடை அதிகரிப்பை உணர்ந்தால் இருவரும் இணைந்து உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி செயல்படுங்கள். இருவரும் இணைந்து உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம். இது உங்கள் இருவரையும் மேட் ஃபார் ஈச் அதர் ஆக்கும்.