girls beauty tips:மாசடைந்த சுற்றுச்சூழலில் வெளியில் எங்கு சென்று வீடு திரும்பினாலும் நாம் அனைவரும் முகத்தை கழுவுவதை வாடிக்கையாக வைத்துள்ளோம். ஆனால் முகத்தை தவறான முறையில் கழுவினால் எந்த பயனும் இல்லை. முகத்தை கழுவும் கையாள வேண்டிய யுத்திகளை இப்போது பார்க்கலாம்
முகத்தை கழுவும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான செயல்கள்:-
ஒவ்வொரு முறை முகத்தை கழுவும் போதும் சூடான நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ முகத்தை கழுவக் கூடாது. மாறாக வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் தான் சருமத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
சிலர் அடிக்கடி முகத்தை கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு அழகான சருமம் கிடைக்கும் என நினைப்பார்கள். ஆனால் அப்படி செய்தால் முகத்தில் உள்ள எண்ணய் பசை முற்றிலுமாக வெளியேறி சருமம் வறட்சியடையும்.
தினமும் குறைந்தது இரண்டு முறையாவது முகத்தை கழுவ வேண்டும். இல்லையெனில் கரும்புள்ளிகள் மற்றும் சரும பிரச்சனை போன்றவை ஏற்படக் கூடும்.
மேக்கப் போடுவதை குறைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் சரும துளைகளில் கிரீம்கள் சென்று அடைப்பை ஏற்படுத்துவதால் முகப்பரு போன்றவை ஏற்படும் வாய்ப்புண்டு. மேக்கப் போட்டு இருந்தாலும் முதலில் மேக்கப்பை நீக்கி விட்டு பின்னர் முகத்தை கழுவுவது நல்லது