ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் முகத்தில் முடி இருப்பதை யாரும் விரும்புவதில்லை. முகம் மாசற்று பொலிவுடன் இருப்பதையே எல்லோரும் விரும்புகிறார்கள். அந்த முகத்தில் பூனை முடி போல் வளர்ந்து அவ்வப்போது நம்முடைய சரும அழகையே கெடுத்துக் கொண்டிருக்கும். அப்படி முகத்தில் தேவையில்லாத முடியை எவ்வாறு நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே நீக்குவது?
எலுமிச்சையும் தேனும்
எலுமிச்சையும் தேனும் சருமத்தில் உள்ள முடியை எளிதாகப் போக்க உதவும். நான்கு ஸ்பூன் தேனும் அதனுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் கலந்து காட்டனில் தொட்டு முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரைத் தொட்டு முகத்தை நன்கு துடைத்துவிட்டு, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள். வாரத்துக்கு இரண்டு நாட்கள் இதைச் செய்தாலே போதும். உங்கள் முகம் பளிங்கு போல் வழுக்கிக் கொண்டு போகுமளவுக்கு மென்மையாகும்.
ஓட்ஸ் ஸ்கிரப்
முகத்திலிலுள்ள முடியை நீக்குவதற்கு மிகச் சிறந்த சாய்ஸ் ஓட்ஸ் ஸ்கிரப் . இரண்டு ஸ்பூன் ஓட்ஸை மிக்சியில் போட்டு பவுடராக்கிக் கொண்டு, அதில் எட்டு முதல் பத்து துளிகள் வரை எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விடவும். அதன்பின் முடி வளரும் தசை பார்த்து நன்கு தேய்த்து பின் கழுவவும். இந்த ஸ்கிரப்பை வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
தயிர் மற்றும் சர்க்கரை
ஒரு ஸ்பூன் தேன் அல்லது சர்க்கரையுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் வரை உலர விடவும். அதன்பின் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தைக் கழுவவும். தயிர் எண்ணெய் பிசுக்குடன் முகத்தில் ஒட்டியிருக்கும். அதனால் மென்மையான ஃபேஷ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவலாம். இது முகத்தில் தோன்றும் அலர்ஜியையும் போக்கும்.
முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால் முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை நீக்க முடியும். அரை ஸ்பூன் சோளமாவு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை ஒன்றாக நன்கு நுரை பொங்குமளவுக்கு அடித்து முகத்தில் மாஸ்க் போட வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்கு கழுவ வேண்டும்.
கடலையும் உருளையும்
கடலைப் பருப்பை ஒரு நாள் இரவு முழுக்க நன்கு ஊற வைத்து, அடுத்த நாள் மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட்டாக்கி, அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து மசித்து முகத்தில் மாஸ்க் போட்டு அரைமணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும். நன்கு உலர்ந்தபின் கழுவவும். இந்த மாஸ்க் உலரும்போது மாவுடன் சேர்ந்து முகத்தில் இருக்கும் தேவையில்லாத பூனை முடியும் நீங்கிவிடும்.