Home பெண்கள் அழகு குறிப்பு முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்கும் இயற்கை வழிமுறை

முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்கும் இயற்கை வழிமுறை

30

Captureசில பெண்களுக்கு ஆண்களைப் போல் மீசை காண ஆரம்பிக்கும். இதனைத் தடுக்க அப்பர்-லிப்ஸ் எடுப்பார்கள். அப்பர்-லிப்ஸ் செய்யும் போது கடுமையான வலியை உணரக்கூடும். இதனைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தினால், அதனால் உடனே முகத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்கலாம்.

இந்த பேக் முடியை நீக்குவது மட்டுமின்றி, சருமத்தை பிரகாசமாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும்.

தேவையான பொருட்கள்:

தேன் – 2 டேபிள் ஸ்பூன்
ஓட்ஸ் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

ஒரு பௌலில் ஓட்ஸ் பொடியுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளரும் இடத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பின் அவ்விடத்தில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

இந்த பேக்கை வாரத்திற்கு 3 முதல் 4 நாட்கள் என ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் வளரும் தேவையற்ற முடியின் வளர்ச்சி முற்றிலும் நின்றிருப்பதை காணலாம்.

ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், இந்த முறையை பின்பற்றும் முன் தோல் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் சருமம் மேலும் மோசமாவதைத் தடுக்கலாம்.