ஆண்கள் தங்களுடைய சரும அழகைப் பராமரிக்க பெரிதாக மெனக்கெடுவது கிடையாது. அது பெண்களுடைய வேலை என்று நினைத்து ஒதுக்கிவிடுகிறார்கள். தன்னைக் கடந்து போகும் பெண், தன்னை கவனிக்காமல் போகும்போது தான் ஆண்களுக்கு அழகு பற்றிய கவலை லேசாக எட்டிப் பார்க்கிறது. இந்த கவலையை எப்படி போக்க எளிய வழிகளை சரும நிபுணர்கள் தருகிறார்கள்.
எப்போதெல்லாம் வீட்டை விட்டு வெளியே செல்கிறீர்களோ அப்போது நிச்சயம் சன்ஸ்டகிரீன் லோஷனைப் பயன்படுத்த வேண்டும். கூடவே மாய்ச்சரைஸரும் பயன்படுத்துவது நல்லது.
எலுமிச்சை ஜூஸை முகத்தில் தடவி ஊறவிட்டுக் கழுவுங்கள். எலுமிச்சை பொதுவாக, எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது. இதிலுள்ள சிட்ரிக் அமிலம் பாக்டீரியாக்களைக் கொல்கிறது.
பாக்டீரியாக்கள் தான் முகப்பருக்களுக்குக் காரணமாக அமைகின்றன. அவற்றை அழிப்பதில் எலுமிச்சை சிறப்பாக செயல்படும்.
சந்தனப்பவுடருன் ரோஸ்வாட்டர் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். அவை உங்களது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும். முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகளை நீக்கும்.
வாழைப்பழமும் வெள்ளரிக்காயும் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவ வேண்டும். வெள்ளரிக்காயும் வாழைப்பழமும் சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
தக்காளி பழத்தின் சாறு சருமப் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமாக இருப்பதால் சருமத்தைப் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. அதோடு, தக்காளி சருமத்துக்கு நல்ல கிளன்சராகப் பயன்படுகிறது.
அதைவிட மிக முக்கியமான ஒன்று, தினமும் உங்களுடைய உணவில் பச்சை காய்கறிகளையும் கீரைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை தானாகவே உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.