Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்கள் அழகான கண்களை பெற தினமும் இந்த பயிற்சியை செய்யுங்க..!

பெண்கள் அழகான கண்களை பெற தினமும் இந்த பயிற்சியை செய்யுங்க..!

77

உடல் கட்டமைப்பு:நாம் அனைவரும் உடற்பயிற்சி செய்வதற்கு எத்தனை முக்கியத்துவம் அளிக்கின்றோமோ அந்தளவு முக்கியத்துவத்தை கண்களுக்கு வழங்குவதில்லை.

ஆனால் அது முற்றிலும் தவறு. ஏனெனில் கண்களுக்கும் பயிற்சி அளிப்பது மிக முக்கியம். அதன் மூலம் கண் தொடர்பான நோய்களை தள்ளிப் போடலாம்.

அதுசரி, கண்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
01.
ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து கொள்ளவும். பின்னர் உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின், உள்ளங்கையால் கண்களை மூடி கொள்ளவும்.

அவ்வாறு செய்யும் போது கரு விழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக் கொள்ள வேண்டும். இதைப் போல் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை செய்தல் வேண்டும்.

02.
கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டு, பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறைசெய்யவும்.

03. மெதுவாக மூன்று விரல்களால் இரண்டு கைகள் கொண்டு மேல் கண் இமைகள் மீது அழுத்தவும். பின்னர், 1-2 விநாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதைப் போல் 5 முறை செய்யவும்.

04. அமைதியாக உட்கார்ந்து பின்னர் கண்களை இடஞ்சுழியாகவும் பின் வலஞ்சுழியாகவும் சுழற்ற வேண்டும். இவ்வாறு 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும்.

05. 10-15 வினாடிகள் ஒரு தொலை தூரபொருளைப் (150 அடிஅல்லது 50 மீட்டர்மேல்) பார்க்கவும். பின்னர், பார்வையை மெதுவாக அருகில் உள்ள பொருள் மீது (30 அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15 வினாடிகள் செலுத்தவும். மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும். இவ்வாறு 5 முறை செய்யவும்.

06. முழங்கையை நீட்டி ஒரு பென்சில் வைத்து, மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும். கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.

07. கண் அசைவுகளை கீழ், மேல் என செய்யவும். இதனை 8 முறை செய்தல் வேண்டும். பின்னர் இடது வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல் வேண்டும். கண்கள் அதன் போக்கில் போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகி விடும்.