பெண்கள் மிகவும் விரும்பக்கூடிய குணங்கள் நம்மிடமும் இருக்கத் தான் செய்கின்றன.
1.பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை மிகவும் விரும்புவார்கள். எனவே, மோசமான விஷயங்கள் மற்றும் இன்னல்களிலில் இருந்து அவளை காக்கும் வல்லமை உங்களிடம் இருப்பதை நிரூபித்துக் காட்டுங்கள்! பிரச்சனைகள் தலையெடுக்கும் போது துணையாக வந்து நிற்கும் ஆண்களை பெண்கள் பெரிதும் வரவேற்பார்கள். எனவே, இந்த வகையில் உங்களிடம் வரும் எந்தவொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறாதீர்கள்.
2.பெண்களின் பர்ஃப்யூம்களால் ஆண்கள் ஈர்க்கப்படுவது போன்று காட்டப்படும் விளம்பரங்களைக் கண்டு ஆண்களுக்கு போரடித்துப் போயிருக்கும். ஆனால், இதனை உங்களுடைய இடத்திலிருந்து கவனித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏற்ற டியோவை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். அதுவும் முதல் முறை டேட்டிங் செல்லும் போது, சோதனை முயற்சியாக டியோவை பயன்படுத்தாமல், முன்பே தேர்வு செய்து பயன்படுத்துங்கள். உங்களுடைய சருமத்தில் எந்த டியோ நல்ல நறுமணத்தைத் தருகிறது என்று அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் டியோடரண்டை உங்களுடைய உடலில் ஸ்ப்ரே செய்யும் போது, அதன் மணமும், உங்களுடைய உடல் மணமும் சேர்ந்து தான் முழுமையான நறுமணம் வெளிவரும். எனவே புத்திசாலித்தனமாக தேர்வு செய்யுங்கள்.
3.ஒரு சாக்லெட்டோ, காதல் கவிதையோ, பரிசுப் பொருளோ அல்லது ஒரு பூங்கொத்து என ஏதாவதொன்றை திடீரென்று ஆச்சரியப்படுத்தும் வகையில் கொடுப்பதால் பெண்கள் மகிழ்ச்சியடைவார்கள். இவற்றை ஆண்களிடமிருந்து பெண்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். இந்த வழிமுறையில் நீங்கள் 100-க்கு 100 எடுப்பது நிச்சயம்!
4.நேர்மையாக இருப்பது இன்றளவும் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல கொள்கையாகும். நீண்ட நாட்களுக்கு நல்ல வகையில் உறவை நீடித்து வைத்திருக்க விரும்பினால், அவளிடம் பொய் சொல்ல வேண்டாம். ஆரம்பத்தில் இது உங்களுக்கு சில தடைகளை கொடுத்தாலும், காலப்போக்கில் அன்பை உறுதிப்படுத்தும்.
5.6-பேக் அல்லது 8-பேக் உடற்கட்டு இருப்பதைக் கண்டு மயங்காத பெண்கள் யாரும் இருப்பதில்லை. இவ்வாறு கட்டுமஸ்தாக பராமரிக்கப்பட்டு வரும் உடலமைப்பைக் கொண்ட ஆண்களை பெண்கள் பெரிதும் விரும்புவர்கள். எனவே, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை ஒரு வழக்கமாகக் கொண்டு, உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
6.மோசமாக உடையணிந்திருக்கும் ஆண் மகனை எந்த பெண்ணும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள். அவ்வப்போது வரும் ஸ்டைல்களை பயன்படுத்திப் பாருங்கள், ஸ்டைலாக பேசுங்கள், உங்களுக்கு எது சரியாக வருகிறது என்பதை கவனியுங்கள். ஆள் பாதி, ஆடை பாதி என்பதை முழுமையாக உணருங்கள்.
7.அழகான ஹேர் ஸ்டைலை கவனிக்காத பெண்கள் இருப்பதில்லை. சிறப்பான ஹேர் ஸ்டைல் ஒட்டுமொத்தமாகவே ஒரு மாறுபட்ட தோற்றத்தை உங்களுக்கு அளிக்கும். இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? பலவகையில் குவிந்து கிடக்கும் ஹேர் ஸ்டைல்களில், கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் பாணியை தேர்ந்தெடுத்து தயாராகிக் கொள்ளுங்கள்.