Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஆரோக்கியமாக வாழ பெண்கள் எந்தெந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்..?

ஆரோக்கியமாக வாழ பெண்கள் எந்தெந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்..?

28

பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற் பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம் .
01. ஏரோபிக்ஸ் கை உடற்பயிற்சி.
02.ஆனோரோபிக் உடற்பயிற்சி.
03.யோகாசன பயிற்சிகள்.
04. ஸ்கிப்பிங் பயிற்சி

இந்த உடற் பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க இவை உதவிபுரியும்.

ஆனோரோபிக் வகை உடற் பயிற்சி என்பது விளையாட்டுத் தனமாகவே இருக்கும் . இதனை உடற்பயிற்சி செய்கிறோம் என்கிற உணர்வில்லாமல் விளையாட்டாக செய்யலாம்.
சில பெண்களுக்குகைகள் மெலிதாக இருக்கும்.

உடம்பு தசைப்பாங்காக இருந்து கைகள் குச்சியைப்போல் இருந்தால், ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்ககூடிய ரூபிடாய் என்கிற சிறிய பாரத்தை கையின் கீழிலிருந்து மார்பு வரை தினமும் தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வரவேண்டும்.

காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு கையை மட்டும் மேலே தூக்கி, பின்னர் கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வரவேண்டும். இடுப்பு வனப்புபெற.

இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக்ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன்பெறலாம்.

தோள்பட்டை அழகாக :
பெண்களின் தோள்பட்டை அவரவர்களின் தலை அமைப்பு, உடல்வாகு, இடுப்பின் அளவு போன்றவற்றை பொறுத்து அமைந்திருக்க வேண்டும்.

தோள்பட்டை அகலமாக இருந்துதலை சிறுத்திருந்தால் நன்றாக இருக்காது. தலையும், இடுப்பும் வனப்பாக இருந்து, தோள்பட்டை வனப்பாக இல்லை என்றால் அழகுவராது.

பெண்கள் தினமும் ஏதாவது ஒரு வேளையில் சாதாரணமாக நின்று கொண்டு கையை இடதும் வலதுமாக சிலுவை குறிபோல விரித்துமடக்கி குறைந்தது பத்துநிமிடம் செய்துவந்தால் தோள்பட்டை அழகாகும். அத்துடன் உடம்பை வளைத்து நெளித்துசெய்யும் ஏரோபிக்ஸ் உடற் பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.