எவ்வளவு தான் சம்பாதித்தாலும் வீட்டில் பணமே தங்க மாட்டேங்குது என்று புலம்புபவர்கள் பலரும் இருக்க வீட்டில் வைத்திருக்கும் செல்வத்தை நாம் செய்யும் சில செயல்கள் அழித்துவிடும்.அதையும் மிக ஜாக்கிரதையாக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நம் வீட்டின் செல்வங்களை, வளத்தைக் குறையாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் கீழ்வரும் செயல்களைச் செய்வதைத் தவிர்த்துவிடுதல் வேண்டும்.
மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின் துளசிச் செடியைத் தொட்டுப் பறிக்கவோ கிள்ளவோ தொடவோ கூடாது. அது வீட்டில் தரித்திரத்தை உண்டாக்கும் என்பார்கள். அதற்குப் பதிலாக, துளசி செடியின் அருகில் அதிகாலை வேளையில் நீரூற்றி, நெய் விளக்குற்றி வழிபட்டால் லட்சுமி குளிர்ச்சியடைந்து செல்வத்தைப் பெருக்குவாள்.
மாலை சூரியன் மறைந்த பின் வீட்டை பெருக்கக்கூடாது. அது வீட்டிலுள்ள லட்சுமியை வெளியே விரட்டுவதற்குச் சமம்.
அதேபோல் மாலை வேளைகளில் உடலுறவில் ஈடுபடக்கூடாது. அது வீட்டில் தரித்திரத்தை உண்டாக்கும்.
சூரிய அஸ்மனத்துக்குப் பின் இரவுக்கு முன் தூங்கக் கூடாது.
உணவு உண்ட உடனே பாத்திரங்களைச் சுத்தப்படுத்தும்.
மாலையில் படித்தால் லட்சுமி தேவிக்குப் பிடிக்காது.
வீட்டையும் நம்முடைய சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் சரியாகக் கடைபிடிதடது வந்தால் லட்சுமிதேவியின் கடாட்சம் முழுவதும் கிடைக்கும்.