உடலுறவு சுகமான இன்பத்தை அனுபவிக்க உதவுவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வாரி வழங்குவதாக மருத்துவர்களின் கூற்று. ஆய்வுகளிலும் தொடர்ச்சியாக உடலுறவு கொண்டால், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.
ஸ்காட்டிஷ் மருத்துவமனை ஆய்வு:
ஸ்காட்டிஷ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுள் யார் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உடலுறவு கொண்டார்களோ, அவர்கள் தங்கள் வயதை விட 7-13 வயது குறைந்து இளமையாக காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இறப்பு விகிதம் குறையும்:
தொடர்ச்சியாக உடலுறவு கொள்வது மக்களின் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அளவுக்கு அதிகமாக உச்சக்கட்ட இன்பத்தைக் காண்பவர்கள், அரிதாக உச்சக்கட்ட இன்பம் காண்பவர்களை விட நீண்ட நாட்கள் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.
மன அழுத்தம்:
தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையால், துணையுடன் போதிய நேரம் செலவழிக்க முடியாமல் போவதோடு, உடலுறவில் கூட ஈடுபட முடியாமல் போகிறது. இன்றைய கால தம்பதிகளிடம் எவ்வளவு முறை உறவில் ஈடுபடுகிறீர்கள் என்று கேட்டால், சிலர், வாரத்திற்கு 2 முறை எனவும், இன்னும் சிலர் அதற்கும் குறைவாக எனவும் கூறுவார்கள்.
கின்சே நிறுவன ஆராய்ச்சி:
கின்சே நிறுவனம் இதுக்குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் அந்த ஆய்வு முடிவையும், எந்த வயதினர் எவ்வளவு முறை உறவில் ஈடுபட வேண்டும் எனவும் வெளியிட்டது.
18-29:
18 முதல் 29 வயதைச் சேர்ந்தவர்கள் ஒரு வருடத்திற்கு சராசரியாக 112 முறை உடலுறவில் ஈடுபடுவது நல்லது.
30-39:
30 முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள், ஒரு வருடத்திற்கு சராசரியாக 86 முறை உடலுறுவில் ஈடுபடுவது நல்லது.
40-49:
40 முதல் 49 வயதிற்குட்டவர்கள், ஒரு வருடத்திற்கு சராசரியாக 69 முறை உடலுறவு கொள்வது நல்லது.
ஆய்வு முடிவு:
ஆய்வு முடிவில், 13 சதவீத திருமணமான தம்பதியினர் வருடத்திற்கு சிலமுறை மட்டுமே உறவில் ஈடுபட்டுள்ளதாகவும், 45 சதவீதத்தினர் மாதத்திற்கு பலமுறை உறவில் ஈடுபட்டிருப்பதும், 34 சதவீதத்தினர் வாரத்திற்கு 2-3 முறையும் மற்றும் 7 சதவீதத்தினர் வாரத்திற்கு 4-க்கும் அதிகமாக உறவில் ஈடுபடுவதும் தெரிய வந்தது.