Home ஜல்சா இங்கிலாந்து ஆண்கள் சிறுமிகளுடன் பாலுறவு வைத்துகொள்ளவே விரும்புவதாக ஆய்வு சொல்கிறது

இங்கிலாந்து ஆண்கள் சிறுமிகளுடன் பாலுறவு வைத்துகொள்ளவே விரும்புவதாக ஆய்வு சொல்கிறது

132

டாக்டர் நியூஸ்:இங்கிலாந்தில் வசிக்கும் ஆண்களில், சுமார் 7,50,000 ஆண்கள் சிறுமிகளுடன் பாலுறவு வைத்துகொள்ளவே விரும்புவதாக ஆய்வு முடிவுகள் வந்ததை அடுத்து என்று அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சமீபத்தில் தேசிய குற்றப்பிரிவு முகமை ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதில், இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ஆண்கள் 7லட்சத்து 50ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிறுமிகளுடன் பாலுறவு கொள்ளவே மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளது.

மேலும், 35 ஆண்களில் ஒரு ஆண், பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்துக் கொண்ட அனுபத்தை கொண்டுள்ளதாகவும், சுமார் 2 லட்சத்து 50ஆயிரம் ஆண்கள், பருவம் அடையாத சிறுமிகளால் ஈர்க்கப்பட்டு இருப்பதாகவும் என்று அதிர்ச்சிகரமான தகவலையும் வெளியிட்டுள்ளது.

அரசு தரப்பு இது குறித்து, ‘ஆண்களிடம் ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக சிறுமிகள் உரையாடும்போது இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேர்வதாகவும், இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் இருந்து தப்பிக்க, சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மேம்பாட்டு வழிமுறைகளை அரசு செய்து வருவதாகவும்’ குறிப்பிட்டுள்ளது.

ஆனால், குழந்தைகள் வதைத் தடுப்பிற்கான தேசிய அமைப்பு இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘ஆய்வில் வெளியாகியுள்ள எண்ணிக்கை விபரங்கள், குறைவாக மதிப்பிடப்பட்டு இருக்கும் என்று சந்தேகமும் எழுப்பியுள்ளது. இங்கிலாந்தில் 12இல் ஒரு பெண் குழந்தை பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தவிர, பெண் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வலைத்தளத்தில் தேடப்படுவது கடந்த ஆண்டில் மட்டும் அதிகரித்து உள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும் எழுந்துள்ளது. தலைநகர் பிரிட்டனில் மட்டும் சுமார் 3 மில்லியன் முறை இதுபோன்ற தேடல்கள் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று, இங்கிலாந்து சிறையில் உள்ளவர்களில் 6இல் ஒருவர் பாலியல் ரீதியான குற்றங்கள் புரிந்தவர் என்றும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபவர்களுக்கான சிறைகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 5 சிறைகள் இருந்தது, தற்போது அது 8 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது