Home பாலியல் பாதுகாப்பான உறவு செக்ஸ் சக்தியை அதிகரிக்கும்

பாதுகாப்பான உறவு செக்ஸ் சக்தியை அதிகரிக்கும்

59

பாதுகாப்பான தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக இதயநோய், ரத்த அழுத்தம் தொடர்புடைய நோய்கள் குணம்மடைகின்றன என்று தெரியவந்துள்ளது.

நியூ இங்கிலாந்து ரிசர்ச் இன்ஸ்டிடியூடினை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி வாரத்திற்கு இரண்டு முறை உறவில் ஈடுபடுபவர்களுக்கு இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்று கண்டறிந்துள்ளனர்.

ஆண்களை விட பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு அமெரிக்காவில் வெளியாகும் இதயநோய் குறித்த மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

எரிக்கப்படும் கலோரி

உறவிற்கு முந்தைய முன் விளையாட்டுக்களினாலும், உறவின் போது ஏற்படும் உச்சக்கட்டத்தின் போதும் 200 கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம், இது நடை பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரிக்கு சமமாகும். உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட கலவி குறைக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இளைமைக்கு மருந்து

உறவின் உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அதிக கலோரிகளை உறவானது கரைக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பான உறவில் ஈடுபட்டவர்களை பரிசோதனை செய்தபோது அவர்களின் உடலில் ரத்த அழுத்தம் 120/80 சராசரி நிலையில் காணப்பட்டது. கெட்ட கொழுப்புச்சத்தை விட நல்ல கொழுப்பு சத்தின் சதவிகிதம் அதிகரித்திருந்தது. இதயதுடிப்பு சராசரியாக விநாடிக்கு 60 லிருந்து 100 அளவாக இருந்து. சுவாசத்தின் அளவு, உள்ளிட்ட மனித உடலின் இயக்கம் சராசரி அளவினை கொண்டிருந்தது.

கலவியானது உடலை உறுதியாக்கி, இதய நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைத்து உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று சிலிர்ப்பூட்டும் அறிக்கையை வெளியிட்டதன் மூலம் தம்பதியர்களை உற்சாகமூட்டியிருக்கிறது அந்த மருத்துவ இதழ்.

இருப்பினும் இது முறையான கலவியை மேற்கொள்பவர்களுக்கே கை கொடுக்கும். மாறாக, இயற்கைக்குப் புறம்பாக, பலருடன் உறவு கொள்வோருக்கு, பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்வோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி வராது, மாறாக பல்வேறு நோய்கள்தான் வந்து சேரும். எனவே கலவியில் கவனம்!.