Home இரகசியகேள்வி-பதில் எனக்கு வயது 16, எனக்கு சில சந்தேகங்கள். எத்தனை வயதில் நாம் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம்?

எனக்கு வயது 16, எனக்கு சில சந்தேகங்கள். எத்தனை வயதில் நாம் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம்?

213

Frustrated couple in bed
உடலுறவு முடிந்தவுடனேயே உறுப்புகளை சுத்தம் செய்யலாமா?

கேள்வி: உடலுறவு முடிந்தவுடனேயே பெண்கள், தங்கள் உறுப்புகளை சுத்தம் செய்யலாமா? அல்லது 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாமா? உடனே பெண் எழுந்து சென்றால் விந்தணுக்கள் பெண் உறுப்பிலிறுந்து வெளியே வந்துவிடுமா? அதனால், கருத்தரிக்க தடைபடுமா?

பதில்: உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம் நீந்துவதன் மூலம் பெண்ணின் கருப்பையிலுள்ள முட்டையை சென்றடையும். அதனால் உடலுறவிற்கு பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இருந்தபோதும் கருத்தரிக்க விரும்பும் பெண்கள் உடலுறவிற்கு பின் இருபது நிமிடங்களுக்கு படுக்கையிலேயே இருப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் இடுப்பின் கீழே ஒரு தலையனைய வைத்து இடுப்புப் பகுதியை உயர்த்தி வைப்பதும் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம் கால்களை ஒன்றன்மேல் ஒன்று போட்டவாறு படுத்திருப்பதும் உகந்தது.
———————————–
காதலனுடன் 2 வருடங்களாக உடலுறவு வைத்துள்ளேன்

கேள்வி:- நான் என் காதலனுடன் 2 வருடங்களாக உடலுறவு வைத்துள்ளேன். இதற்கு முன் எனக்கு மாதவிடாயில் பிரச்னை இருந்ததில்லை. இப்போது சரியாக வருவதில்லை. ஸ்கேன் செய்ததில் எந்த நோயும் இல்லை என்றார்கள். இந்த பிரச்னைக்கு என்ன காரணம்?

பதில்:- திருமணத்திற்கு முன் உடலுறவு என்பது உடலுக்கும், உள்ளத்திற்கும் சமுதாயத்திற்கும் நல்லதல்ல. உங்களது வயதை குறிப்பிடாமல் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினம். மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்

——————-
கேள்வி : எனக்கு வயது 16, எனக்கு சில சந்தேகங்கள். எத்தனை வயதில் நாம் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம் என்றும் எத்தனை வயதுவரை நாம் உறவில் ஈடுபட முடியும் தயவு செய்து விளக்கினால் என் சந்தேகம் தீரும்.

பதில்: எப்போது நாம் பூப்படைகிறோமோ அப்போதே நம் உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக்கும் குழந்தை பெறுவதற்கும் தயாராகத் தொடங்குகிறது.

எத்தனை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலாச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு பெண்ணோ அல்லது ஆணோ உடல் அளவிலும் மன அளவிலும் உறவில் ஈடுபடத் தயாரோ அப்போதே அவர்கள் உறவில் ஈடுபடலாம்.

ஆனால் முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பெரிய பிரச்சனைகளை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்தலாம்.

அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

ஆகவே திருமணமாகியிருந்தாலும் கூட 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கர்ப்பமடைவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் எத்தனை வயது வரை உறவில் ஈடுபட வேண்டும் என்பதிலும் கட்டுப்பாடு இல்லை. எத்தனை வயதுவரை உங்களால் முடியுமோ அத்தனை வயதுவரை நீங்கள் உறவில் ஈடுபடமுடியும்.

ஆனாலும் இளவயதுப் பெண்களைப் போல வயதான பெண்களும் கர்ப்பமடைவதால் பல பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படலாம்.

ஆகவே தேவையான குழந்தைகளை பெற்றுக் கொண்ட பெண்கள் உரிய குடும்பக் கட்டுப்பாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியமாகும்