தேங்காய்ப்பால் முட்டை குழம்பினை சாதம், சப்பாத்தி, தோசை உடன் சேர்த்து சாப்பிடலாம். இப்போது தேங்காய்ப்பால் முட்டை குழம்பு எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையானவை
முட்டை – 4
எண்ணெய் – 3 டீஸ்பூன்
இலவங்க பட்டை – 1
கிராம்பு – 4
ஏலக்காய் – 1
வெங்காயம் – 2 சிறியது
பச்சை மிளகாய் – 3
இஞ்சி-பூண்டு விழுது – 1 ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரக தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
கெட்டியான தேங்காய் பால் – 35௦ மில்லி
நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 டீஸ்பூன்
தண்ணீர் – தேவைக்கேற்ப
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை அரிந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து 1/2 நிமிடம் வறுக்கவும். அதனுடன், நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை கலக்கவும்.
மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சோம்பு தூள் சேர்த்து 1 நிமிடம் கலக்கவும்.
உப்பு, 2 கப் தண்ணீர், தேங்காய் பால் சேர்க்கவும். வீட்டில் தயாரித்த தேங்காய் பால் சேர்த்தால் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாறு சேர்த்து மூடி வைத்து 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கடாயில் ஊற்றவும். மேலே உள்ள செய்முறையை எல்லா முட்டைகளுக்கும் பின்பற்றவும். முட்டையை ஒன்றின் மீது ஒன்று ஊற்றாமல் பார்த்துக் கொள்ளவும். மூடி வைத்து 4-5 நிமிடங்கள் சமைக்கவும்.
நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவிடவும்.
தேங்காய் பால் முட்டை குழம்பு பரிமாறலாம்.