உடல் எடையை குறைக்க முக்கியமாக எல்லாரும் சொல்வது வாக்கிங் போ. என்பதுதான். நடைபயிற்சி மிக மிக அவசியமானது. உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்மை தரும் எளிய பயிற்சி எதுவென்றால் அது நடைப் பயிற்சிதான்.
ஆனால் இயற்கையோடு இயற்கையாக காலையில் விறுவிறுவென நடந்து வந்து பாருங்கள். நாள் முழுவதும் சிறு களைப்பு கூட வராது. ஆனால் நான்கு சுவற்றுக்குள் இருக்கும் ஒரு மெஷினில் வேர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்வதையே எல்லாரும் வசதியாகவும் நேரம் குறைக்கிறது எனவும் செய்கின்றனர். ஆனால் அது முற்றிலும் உண்மை கிடையாது.
நீங்கள் 10 நிமிடம் ஏற்ற இறக்கங்களின் நடப்பது, இந்த மெஷின்களின் நீங்கள் அரை மணி நேரம் செய்வதற்கு சமம். அப்படி பார்த்தால் நேரம் குறைப்பது நடைப் பயிற்சிதான்.
நடப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மை :
வேறென்ன. அதிக கலோரிகளை நடைபயிற்சியினால் எரிக்க முடிகிறது. உடலுக்கு அதிக ஆக்ஸிஜன் பெறப்படுகிறது. புதிதான காற்றினால் உடலுக்கு செல்களுக்கு புத்துயிர் கிடைக்கிறது. உடல் எடை குறைகிறது. கொழுப்பு கரைகிறது. இதயம் வலுக்கிறது. ரத்தம் அதிகரிக்கின்றது என எண்ணிடலங்கா நன்மைகளை நாம் சொல்லலாம்.
யாரெல்லாம் நடைப்பயிற்சி செய்யலாம்?
யாரும் செய்யலாம் என்பதை விட யார் முக்கியமாக செய்ய வேண்டும் என்பது அவசியம். வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்பவர்கள் நடப்பதை விட, எந்நேரமும் கணினி அல்லது அமர்ந்து கொண்டே செய்பவர்கள் கட்டாயம் நடந்தால்தான் பிற்காலத்தில் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
எவ்வளவு தூரம் ;
ஆரம்பிக்கும்போது 10-15 நிமிடங்கள் நடக்க ஆரம்பியுங்கள். பின்னர் ஓரிரு வாரத்தில் நீங்கள் அதனை 30 நிமிடங்களாக மாற்றிக் கொள்ளுங்கல். தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது நீங்கள் நடந்தால் 5 மாதத்தில் 10 -20 கிலோ கண்டிப்பாக குறைக்கலாம்.
பீடோ மீட்டர் :
சிலருக்கு சரியான தூரம், நடை நடந்தோமா என சந்தேகம் வரலாம். அல்லது பயிற்சியை ஒழுங்காக பின்பற்ற வேண்டும் என நினைப்பதுண்டு. அவர்களுக்கு இந்த பீடோ மீட்டர் நன்மை தரும். இந்த அளவீட்டுக் கருவி நீங்கள் எத்தனை அடி எடுத்து வைக்கிறீர்கள், தூரம் போன்றவற்றை துல்லியமாக காண்பிப்பதால் நீங்கள் உங்கள் குறிக்கோளை வேகமாக அடைய இந்த கருவி உதவும் என்பதில் சந்தேகமில்லை.
நோய் எதிர்ப்பு சக்தி :
தினமும் அரை மணி நேர நடந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது உடல் முழுவதும் சீராக ரத்த ஓட்டம் பாயும். இதனால் பாதிப்படைந்த திசுக்கள் தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்ளும். நோய் எதிர்ப்பு செல்கள் பலம் பெறும்.
எலும்புகள் :
உங்கள் எலும்புகள் பலம் பெறும். காலை நேரத்தில் நடக்கும்போது சூரியனிடமிருந்து பெறப்படும் சக்தி உங்களுக்கு மிகவும் தேவை. விட்டமின் டி போதிய அளவு கிடைப்பதால் எலும்புகள் பலம் பெறுகிறது.
இதயம் :
மிக முக்கியமான நன்மை இதுதான். இதயத் தசை நார்கள் வலுப்பெறுகின்றன. கொழுப்புகள் இதயத்தில் படிவதும், தமனிகள் சேர்வதும் தடுக்கப்படுகிறது. இதயத் துடிப்பு சீராகிறது.
மன அழுத்தம் :
மன அழுத்தத்தை குறைக்கிறது. தினமும் நடக்கும் போது எண்டார்பின் என்ற ஹார்மோன் தூண்டுவது தடுக்கப்படுகிறது. மன அழுத்தம், பதட்டம் போன்றவை இந்த ஹார்மோனால் அதிகரிக்கும். நடைப் பயிற்சி இந்த ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது.
சுவாச நோய்கள் :
நடக்கும்போது, காற்றில் உள்ள ஆக்ஸிஜனை அதிக அளவில் உள்வாங்கி, சுவாச மண்டலம் அதனை நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றன. நுரையீரலின் சுவாசத் திறன் அதிகரிக்கிறது. ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட சுவாச நோய்கள் கட்டுப்படுகின்றன.
மூட்டு வலிகள் :
நடைப்பயிற்சியானது மூட்டுகளில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுவதால் எலும்புகளையும் இணைப்பதிசுக்களையும் பலப்படுத்துகிறது. மூட்டுகளைத் தேயவிடாமல் பாதுகாக்கிறது. ஆனால் மூட்டு வலி வந்தவுடன் நடைப் பயிற்சி செய்வது கூடாது.
சர்க்கரை வியாதி :
தினமும் நடைப்பயிற்சி செய்யும்போது, உடலில் செயல்படாமலிருக்கும் இன்சுலின் தூண்டப்படுவதால், அவை புத்துயிர் பெற்றுச் செயல்படத் தொடங்குகின்றன. இதனால், இதுவரை பயன்படாமல் இருந்த இன்சுலின், ரத்தச் சர்க்கரையைக் குறைத்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
கொழுப்பை குறைக்கும் :
பல மோசமான நோய்களான ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, பக்கவாதம் போன்றவற்றிற்கு முக்கிய காரணமான கொழுப்பை குறைக்க நடைப் பயிற்சி உதவுகின்றது. தினமும் நடக்கும்போது கொழுப்பு கரைவதை நாளுக்கு நாள் நீங்கள் கண்கூடாக காணலாம்.
தூக்கம் :
பகல் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தால் இரவில் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் தூக்கம் வந்துவிடும். உங்களுக்கு நடைபயிற்சி செய்யும்போது உடல் காலையில் சக்தி பெற்றும், இரவில் நிம்மதியான தூக்கமுமாக ஒரு சீரான வாழ்க்கை முறையை தரும்.
கால் தசைகள் வலுப்பெறும் :
வேகமாக நடக்கும்போது, கால்களில் ரத்தக்குழாய்களுக்குப் பக்கத்தில் உள்ள தசைகள் தூண்டப்பட்டு, இதயம் செயல்படுவதுபோல் வலுவான அழுத்தத்துடன் ரத்தத்தை உடல் முழுவதும் அனுப்புகின்றன. இதனால் எல்லா உடல் உறுப்புகளும் சீராகப் பணி செய்து ஆரோக்கியம் பெறுகின்றது.
அதிகாலையில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் :
நடப்பதிலும் காலை இளம் வெயிலில் நடக்கும்போது சூரியனிடமிருந்து கிடைக்கும் சக்தி நமது உடலுக்குள் ஊடுருவுகிறது. சுறுசுறுப்புடன் நாள்முழுவதும் இருக்கலாம்.
வெறுங்காலில் நடப்பதால் உண்டாகும் நன்மைகள்:
அதிகாலையில் செருப்பை போட்டு நடப்பதை விட வெறுங்காலில் நடப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது. பூமியின் ஆகர்ஷ்ண சக்தி உடலுக்கு பாதம் வழியாக உடலுக்கு கிடைப்பதால் நோய்கள் குணமாகும்.