தூங்கி எழுந்தவுடன் சாப்பிடுவது, சாப்பிட்டவுடனே ஏதாவது வேலை பார்ப்பது என தாறுமாறாக நாம் எதையாவது செய்து கொண்டிருக்கிறோம். அதனால் அஜீரணக் கோளாறுகள் உண்டாகின்றன. அதிலும் குறிப்பாக சில விஷயங்களை சாப்பிடவுடன் செய்யவே கூடாது. அப்படி செய்யக்கூடாத விஷயங்கள் தான் என்ன?
பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது தான். ஆனால் கட்டாயம் சாப்பிட்டு முடித்தவுடன் பழங்களைச் சாப்பிடக்கூடாது. சிலருக்கு சாப்பிட்ட பின் ஃபுரூட் சாலட் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அது முற்றிலும் தவறு. வேண்டுமானால் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ பின்போ பழங்களைச் சாப்பிடலாம்.
சாப்பிட்டு முடித்தவுடன் உடனடியாக டீ குடிக்கக்கூடாது. அதனால் அசிடிட்டி பிரச்னை உண்டாகும். மேலும் டீ உணவில் உள்ள புரதத்தைச் செயலிழக்கச் செய்துவிடும்.
என்றைக்காவது ஒரு நாள் சாப்பிட்டவுடன் குளிப்பது பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால் அடிக்கடி அப்படி செய்யக்கூடாது. குளிக்கும்போது ரத்த ஓட்டம் கை, கால் மற்றும் உடலுக்கு வேகமாகச் சென்று வரும். ஆனால் அந்த சமயத்தில் ஜீரண சக்தியை அதிகரிக்க ரத்தம் வயிற்றுப்பகுதிக்குச் செல்லாது. அதனால் ஜீரணமடைவது தாமதமடையும்.
அதேபோலத் தான் சாப்பிட்டவுடன் வேகமாக வாக்கிங் செல்லவும் கூடாது. அப்போதும் குளிக்கும் போது உண்டாகிற அதே பிரச்னை உண்டாகும்.
அதனால் முடிந்தவரையில் உணவுக்குப் பின் சில நேரம் எதுவும் செய்யாமல் இருப்பதே நல்லது.