Home சமையல் குறிப்புகள் வீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய பட்டர் சிக்கன்

வீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய பட்டர் சிக்கன்

33

அசைவ உணவுகளில் மிகவும் ருசியானது பட்டர் சிக்கன். சிக்கன் ரெசிபிகளில் பட்டர் சிக்கன் செய்முறை மிகவும் எளிமையானது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பட்டர் சிக்கன் செய்து சாப்பிட்டு பாருங்கள். அதை எப்படி தயாரிப்பது எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

நெய் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி , பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்
தக்காளி – 1 கப்
சீரகப் பொடி- 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1/4 கப்
சதைப் பகுதியான கோழிக்கறி – 200 கிராம்
உப்பு – சுவைக்கேற்ப
கிரீம் – 1/2 கப்
வெந்தய இலை – 1/4 டீ1பூன்
வெண்ணெய் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – அழகுப்படுத்த

செய்முறை

சிக்கன் துண்டுகளை இஞ்சி, பூண்டு விழுது, தயிர் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து மிதமான தீயில் நெய் விட்டு உருகியதும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி விட்டு நறுக்கிய தக்காளி, சீரகப் பொடி, மிளகாய்த்தூள், கரம் மசாலா, தனியா தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பிறகு, வதக்கிய வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் அரைத்து வைத்த கலவை, தயிரில் ஊற வைத்த சிக்கனை கடாயில் போட்டு நன்கு கிளறி விட்டு கிரீம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பட்டர் சிக்கனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் நெய் விட்டு கொத்தமல்லி இலையைத் தூவி விட்டு பரிமாறலாம்.

பட்டர் சிக்கன் ரெடி! இந்த ரெசிபியை சப்பாத்தி, நாண், சாதம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.