பெண்களுக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான் யோனி வறட்சி. குறிப்பாக இப்பிரச்சனையால் வயதான பெண்கள் தான் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள், அதுவும் மாதவிடாய் நிறுத்ததிற்கு பின் தான். பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவாக சுரக்கப்படும் போது, யோனியில் வறட்சி ஏற்படும். யோனி மிகவும் வறட்சியுடன் இருந்தால், உடலுறவின் போது வலி, யோனியில் எரிச்சல், அரிப்பு, அசௌகரியத்தை உணர்வதோடு, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதில் இடையூறை சந்திக்க நேரிடும். மேலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். பெண்களின் அந்தரங்க உறுப்பில் வறட்சி ஏற்படுவதற்கு வேறுசில காரணிகளும் உள்ளன. அவற்றைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இறுதி மாதவிடாய் இறுதி மாதவிடாயின் போது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும். பொதுவாக ஈஸ்ட்ரோஜென் தான் பிறப்புறுப்பில் உயவுப் பொருளாக செயல்பட்டு, யோனி பகுதியை ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும். அந்த ஈஸ்ட்ரோஜென் குறையும் போது வறட்சி ஏற்படும்.
தாய்ப்பால் கொடுக்கும் போது/பிரசவத்தின் போது பொதுவாக இக்காலங்களில் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி தற்காலிகமாக குறைந்திருக்கும். இதன் காரணமாக மற்ற காலங்களை விட இக்காலங்களில் வறட்சி ஏற்படும். மருந்துகள் குறிப்பிட்ட மருந்துகளான மன இறுக்க மருந்துகள், ஆன்டி-ஹிஸ்டமைன்கள் போன்றவை உடலினுள் வறட்சியை ஏற்படுத்தும் மற்றும் யோனியில் ஈரப்பசையையும் குறைத்து வறட்சியை உண்டாக்கும்.
தூண்டலின்மை சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடும் முன், போதிய அளவு பாலுணர்ச்சி தூண்டப்படாவிட்டால், அதன் காரணமாகவும் யோனியில் வறட்சி ஏற்படக்கூடும். புற்றுநோய் சிகிச்சை புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் சிகிச்சையின் காரணமாகவும் யோனியில் வறட்சி உண்டாகும். சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இருந்தாலும், சில நேரங்களில் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படக்கூடும். என்னவாக இருந்தாலும், யோனியில் வறட்சியை அதிகம் சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.