பெரும்பாலான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மது அருந்தினால் அதிக ஈடுபாட்டுடன் செக்ஸ் செயல்பாடுகளில் இறங்க முடியும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. செக்ஸ் என்பது ஆண்&பெண் இருவரின் மன மொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில் பார்த்தால் டெஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அளவைப் பொருத்தே அமைகிறது. இது ஆண்&பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாகச் சுரக்க செய்யும் தன்மை கொண்டவை. இயற்கைக்கு மாறாக நரம்புகளை துண்டிவிடுவதால் போதை மருந்து உள்கொண்ட விளையாட்டு வீரர்களை கூட போட்டிக்கு அனுமதிப்பதில்லை. அதேபோல் செக்ஸ் நடவடிக்கைகளில் போதைப்பொருள்கள் சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் போது உடல் தன் நிலையை மறந்து விடத் தொடங்குகிறது. போதைப் பொருள்கள் உணர்ச்சியை தூண்டுவது போல் தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது. மேலும் உச்சக்கட்டத்தை பெறவும் உதவாது. சில சமயங்களில் உச்சகட்ட நிலை ஏற்படுவதையே தடுத்து விடும் ஆற்றல் படைத்தவை. சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு அதிக வேகத்தில் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. அதேபோல் சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு உறவின் போது உறுப்பில் வழுவழுப்பு தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவு குறைந்து வறட்சி தன்னை ஏற்படுகிறது. இதற்கு சிகரெட்டில் உள்ள நிகோடின் தான் காரணம். மன உளைச்சலைக் குறைக்கும் மருந்துகளுக்கு கூட இந்த தன்மை உள்ளது. இப்படிப் பட்ட மருந்துகளை உள்கொள்ளும் போது செக்ஸ் உணர்வு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. போதைப்பொருள்களைப் போலவே மதுவும் உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதால் முதலில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்துவிடும். குறிப்பாக அதிக அளவில் மது உள்கொள்ளும் போது அவர்களை மயக்கம் அடையச் செய்து உன்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் மாற்றிவிடுகிறது. செக்ஸில் உச்சக்கட்டத்தை உண்டாக்கும் நரம்பு மண்டலத்தை மது நேரடியாகவே தாக்குகிறது. உனவே மது அருந்தியவர்கள் செக்ஸில் ஆர்வமாக ஈடுபட முடியும் என்பது உண்மை. ஆனால் செக்ஸ் செயல்பாடு முடிந்தபிறகு போதிய மகிழச்சி இருக்காது. செக்ஸ் செயல்பாடுகளில் ஆண்&பெண் இருவரும் தங்கள் விருப்பங்களை தெளிவான முறையில் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் மது அருந்திய ஆண் அவனது ஆசையை மட்டும் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பானே தவிர தன்னுடைய இணையின் ஆசைகளை தெரிந்துகொள்ளும் மனநிலையில் இருக்கமாட்டான். அதனால் குடிகார ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு முழுமையான செக்ஸ் இன்பம் கிடைப்பதில்லை. குடி போதையில் மிகச்சிறப்பான முறையில் செக்ஸ் அனுபவித்ததாக ஆண்கள் நினைத்துக் கொள்ளலாமே தவிர உண்மையில் எதுவும் இருக்காது. அதனால் செக்ஸ் நிறைவை பெறவிடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப் போதை பொருள்களைத் தவிர்ப்பது செக்ஸிக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கு பயன் அளிக்கக்கூடியதாகும். செக்ஸ் இன்பத்துக்காக போதை பொருள்பயன்படுத்துவதில் இன்னொரு மாபெரும் அபாயம் இருக்கிறது. அதாவது மது அல்லது போதைப் பொருள்களை உபயோகித்து அதன்பிறகு மட்டுமே தொடர்ந்து செக்ஸில் ஈடுபடுபவர்களால் குறிபிட்ட நாள்களுக்கு பிறகு போதைப் பொருள்கள் இல்லாமல் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடவே முடியாமல் போய்விடும். இது உடல்நிலையை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும். – See more at: http://vannimedia.com/site/news_detail/29104#sthash.qgKi76hg.dpuf
Home சூடான செய்திகள் போதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் பெண்கள் மீது அதிக வலிமையுடன் செயல்படுவார்களா..?