Home இரகசியகேள்வி-பதில் சுயஇன்பம் பற்றிய சந்தேகங்களும் பதில்களும்

சுயஇன்பம் பற்றிய சந்தேகங்களும் பதில்களும்

196

ஆண்கள் எப்படி சுயஇன்பம் செய்கிறார்கள்? (How do men masturbate?)

பாலியல் கிளர்ச்சியையும் உச்சத்தையும் அடைவதற்காக, ஒருவர் தனது இனப்பெருக்க உறுப்பைத் தூண்டும் செயலே சுயஇன்பம் எனப்படுகிறது.

ஆண்கள் பொதுவாக, புணர்ச்சிப்பரவசநிலை வரும் வரை அல்லது விந்து வெளியேறும் வரை ஆணுறுப்பைத் தட்டி, முன்னும் பின்னும் இழுத்துக் குலுக்குவதன் மூலம் சுயஇன்பம் செய்வார்கள். சிலர் ஏதேனும் ஒரு பொருளின் மீது ஆணுறுப்பைத் தேய்ப்பது, அழுத்துவது போன்ற முறைகளிலும் சுயஇன்பம் செய்வார்கள். பலர் பல வழிகளில் சுயஇன்பம் செய்வார்கள். அது எப்படிச் செய்வது அவர்களுக்கு நன்றாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது.

பாலியல் கிளர்ச்சியின் உச்சத்தில் ஆணுறுப்பிலிருந்து விந்து வெளியேறுகிறது. விந்து என்பது, வளர்ந்து வரும் விந்தணுக்களைக் கொண்டிருக்கும் திரவமாகும். சில ஆண்கள் பாலியல் கிளர்ச்சிக்காக ஆணுறுப்பைத் தூண்டி, ஆட்டி அசைத்து இன்பம் காண்பார்கள். ஆனால் சுயஇன்பம் செய்யும் ஒவ்வொரு முறையும் அவர்கள் விந்தை வெளியிடாமல் இருக்கலாம்.

சுயஇன்பம் என்பது பதின்பருவ ஆண் பிள்ளைகளும் வயதுவந்த ஆண்களும் செய்யும் பொதுவான செயல்தான். பெரும்பாலான சிறுவர்கள், பதின்பருவத்தில் அதாவது சுமார் 16 வயதுவாக்கில் சுயஇன்பம் செய்வது பற்றித் தெரிந்துகொள்கின்றனர். இந்த வயதிற்குள் பெரும்பாலான சிறுவர்கள் சுயஇன்பம் செய்துபார்த்திருப்பார்கள். இந்தியாவில் நடத்தப்பட்ட பாலியல் கருத்துக்கணிப்பு (இந்தியா டுடே செக்ஸ் சர்வே 2012) ஒன்றில், பங்கேற்ற ஆண்களில் சுமார் 71% பேர் சுயஇன்பம் செய்திருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.

ஆண்கள் ஏன் சுயஇன்பம் செய்கிறார்கள்? (Why do men masturbate?)

ஆண்கள் சுயஇன்பம் செய்ய முக்கியக் காரணம் அதில் அவர்களுக்குக் கிடைக்கும் பாலியல் இன்பம் தான். பலருக்கு பாலியல் கற்பனைகள் பலவிதமாக இருக்கும், சுயஇன்பம் செய்வது அவர்களின் கற்பனைகளைத் தட்டித் தூண்டி இன்பம் பெறவும், பாலியல் அழுத்தத்தை வெளியிட்டு அமைதிநிலை அடையவும் உதவுகிறது. உடலில் விந்து சேரும்போது, அது உடலிலிருந்து வெளியேற சுயஇன்பம் உதவுகிறது.

சுயஇன்பம் செய்வதால் உடலுக்கு ஏதேனும் கெடுதல் ஏற்படுமா? (Are there any ill effects caused to the body by masturbation?)

சுயஇன்பம் உடலுக்கு எவ்விதக் கெடுதலையும் ஏற்படுத்துவதில்லை.

ஆணுறுப்பு மிக மென்மையான உறுப்பு, ஆகவே எந்தப் பொருளுக்குள்ளும் அதனை நுழைப்பதை அல்லது ஆணுறுப்பின் திறப்புக்குள் ஏதேனும் பொருள்களைச் செருகுவதைத் தவிர்க்க வேண்டும்.

சுயஇன்பம் செய்வதால் பால்வினை நோய்த் தொற்றுகள் ஏற்படுமா? (Can I get a sexually transmitted disease from masturbation?)

சுயஇன்பம் என்பது யாருடனும் இல்லாமல், உங்களுக்கு நீங்களே செய்துகொள்வது என்பதால், இதனால் பால்வினை நோய்கள் வராது.

பால்வினை நோய்கள் பொதுவாக பாலியல் தொடர்பில் ஈடுபடும்போது, கிருமி பாதிப்புள்ள நபரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.

பாதிப்புள்ள நபரின் உடலும் (விந்து, யோனித் திரவம் அல்லது இரத்தம் போன்றவை) உங்கள் திறந்திருக்கும் தோல் பகுதியும் நேரடியாகப் பட்டுக்கொண்டால் நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது. இது போன்ற சூழ்நிலைகள் சுயஇன்பத்தின்போது ஏற்படக்கூடும்.

சுயஇன்பத்திற்கு நான் அடிமையாகிவிடுவேனா? (Can I get addicted to masturbation?)

இன்பம் கொடுக்கும் எந்த ஒன்றும் ஒருவரை அடிமையாக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இது சுயஇன்பத்திற்கும் பொருந்தும்! இந்த அடிமைத்தனத்தால் உடலுக்குத் தீங்கு எதுவும் இல்லை. ஆனால் சிலருக்கு உளவியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.

மீண்டும் மீண்டும் சுயஇன்பம் செய்வதால் சிலருக்கு குற்றவுணர்ச்சி ஏற்படலாம். பெரும்பாலான சமயப் புத்தகங்களும் பண்பாட்டு விதிமுறைகளும் சுயஇன்பம் என்பதை தீய பழக்கம் என்றே கூறுவதால், இத்தகைய நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் ஒருவர், சுயஇன்பம் செய்வதால் குற்றவுணர்ச்சி அடையலாம். சுயஇன்பம் கொடுக்கும் இன்ப உணர்வுக்கும் சுய நம்பிக்கைகளால் உண்டாகும் குற்றவுணர்ச்சிக்கும் இடையே ஏற்படும் போராட்டத்தால் சிலருக்கு வெட்கம், குற்றவுணர்ச்சி, மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சனைகள் ஏற்படலாம்.