நாயுடன் பாலியல் உறவுகொண்ட நிலையில் அக் காட்சியை வீடியாவிலும் பதிவுசெய்து கொண்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர், அவ்வீடியோ போலியானது என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த அம்பர் ஃபினே எனும் 33 வயதான இப் பெண், மிருகம் ஒன்றுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இவர் நாயுடன் பாலியல் உறவில் ஈடுபம் காட்சி உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கும் பொலிஸ் நிலையத்துக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
இவ் வீடியோவில் காணப்படும் பெண்ணை பொலிஸார் தேடி வந்தனர். கடந்த ஜனவரி மாதம் அவரை கைது செய்வதற்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று மருந்தகம் ஒன்றக்கு சென்றிருந்த வேளையில், அங்கிருந்த ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டார்.
அதையடுத்து பொலிஸார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது.
இதன்போது, அம்பர் ஃபினே கைது செய்யப்பட்டவுடன் மேற்படி வீடியோ போலியானது என பொலிஸாரிடம் தெரிவித்தார் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இவ் வீடியோவை பார்த்த எவரும் அது அசலானது என்பதை ஒப்புக் கொள்வர் என பொலிஸ் அதிகாரி நிக் கார்னே தெரிவித்துள்ளார்.