Home ஆரோக்கியம் பொது மருத்துவம் Doctorx பேக் பெயினால அவதிப்படறீங்களா?… என்ன சாப்பிடலாம்… என்ன சாப்பிடக்கூடாது?…

Doctorx பேக் பெயினால அவதிப்படறீங்களா?… என்ன சாப்பிடலாம்… என்ன சாப்பிடக்கூடாது?…

31

முதுகுத்தண்டில் ஏற்படும் தீராத வலி வயதானவர்களை மட்டுமே தாக்குவதில்லை. கழுத்தில் ஏள்படும், உடல் உழைப்பு அதிகமுடையவர்கள், தொடர்ந்து கம்யூட்டர் முன்னால் உட்கார்ந்து வேலை பார்க்கும் கார்ப்பரேட் இளைஞர்கள் என எல்லோரையும் குறிவைத்துத் தாக்குகிறது.

அதிலும் குறிப்பாக, கழுத்துப்பகுதியில் தாங்க முடியாத வலியும் உண்டாகும். உங்களையும் இந்த வலி பாடாய் படுத்துகிறதா? வலியும் அதனால் உண்டாகும் சங்கடங்களையும் போக்க வீட்டிலேயே சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

பசு நெய்

நம்முடைய பழங்கால ஆயுர்வேத மருத்துவ முறைகளில், பசு நெய்க்குத் தனியிடம் உண்டு. பல மருந்துகளை பசு நெய்யோடு கலந்துதான் சாப்பிட வேண்டும். பசு நெங் எலும்புகளின் இணைப்பை உறுதிபடுத்துகிறது. எலும்புகளை வலுவூட்டுகின்றன. மேலும், எலும்புகளுக்கிடையேயான மூட்டுப்பகுதிகளின் அசைவுகளை சீர்படுத்தி, அவை விலகாமல் பார்த்துக் கொள்ளவும் பசு நெய் உதவுகிறது.

மூலிகைப்பொருட்கள்

இயற்கையாக நமக்குக் கிடைக்கிற மருந்துப் பொருட்களான மஞ்சள், இஞ்சி, ஆவாரம்பொடி, கரிசலாங்கண்ணி பொடி, கற்றாழை லேகியம், அதிமதுரப்பட்டை வேர்கள் ஆகியவற்றை எப்போதும் வீடுகளில் வைத்திருப்பது நல்லது.

இவை முதுகுத்தண்டில் ஏற்படும் வலியைக் குறைக்கின்றன. மஞ்சள், இஞ்சி, வெந்தயம் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

முதுகுத்தண்டு வலியால் அவதிப்படுபவர்கள் கட்டாயமாக சில உணவுகளைத் தவிர்த்தே ஆகவேண்டும். உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக்கொள்வதை முதலில் நிறுத்த வேண்டும். உணவை சூடாக சாப்பிடக்கூடாது.

எண்ணெயில் பொரித்த உணவுகள், மைதா உணவுகள், பேக்கரி உணவுகள் போன்றவற்றைத் தொடவே கூடாது. கோதுமை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டு, அரிசி உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
கட்டாயம் சாப்பிட வேண்டியவை

வேப்பம்பூ, பாகற்காய், முருங்கைக்காய் ஆகியன மூட்டுவலி பிரச்னைக்கு நல்ல மருந்து. ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.