01) நான் முதல் முறை உடலுறவு செய்யும்போது, அதற்கு ஏன் ப்ளான் செய்ய வேண்டும்?இயல்பாக, உணர்வு பூர்வமாக நடக்கும் விஷயம் தானே காமம்? அதற்கு எதற்கு முன்னெச்சரிக்கை?
நீங்கள் உடலுறவு கொள்ள முயற்சி செய்தால், நீங்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
குறைந்த பட்சம் ஆணுறையோ, அல்லது மற்ற கருத்தடை சாதனங்களோ உபயோகப்படுத்துங்கள். இல்லை என்றால் கருப்பிடிக்கவோ, அல்லது பால்வினை நோயோ வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புள்ளி விவரப்படி, டீன் ஏஜில் கர்ப்பமாதல், முன்னெச்சரிக்கை இல்லாமல் உடலுறவு கொள்வதால் தான்.
இப்படி ஆனால் அப்புறம் கருக்கலைப்பு, வீட்டை விட்டு ஓடிச்செல்வது போன்ற விபரீதமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கலாம்.
02) ஆண்குறி உடலுறவின் போது விறைக்கவில்லை என்றால் என்ன செய்வது? இப்படி ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது?
நீங்கள் பதட்டமாக இருந்தால் இது போல நடக்க வாய்ப்பு உள்ளது. பல ஆண்களுக்கு முதல் முறை உடலுறவின் போது ஆண் குறி விறைக்காது. இந்த நேரத்தில் தான் நீங்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்.இப்படி ஆண்குறி விரைக்காத் நேரத்தில் முத்தம் கொடுப்பது, தடவுவது, நாக்கு/விரலை உபயோகிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். உங்கள் பதட்டம் நீங்கி முழுமையாக மனம் காமத்தில் திளைக்கும்போது, ஆண் குறி தானாக விறைப்படைய ஆரம்பித்துவிடும்.
03) நான் ஒரு மாணவி. பக்கத்து வீட்டு பையன் சில நாட்களுக்கு முன் உடலுறவு செய்தான், அது தான் எனக்கு முதல் முறை. ஆனால் என் உறுப்பில் இருந்து ரத்தம் வரவில்லையே, ஏன்? இது சாதாரணமான விஷயம் தான்.
பல பெண்களுக்கு முதல் முறை உடலுறவின் போது ரத்தம் வராது.கன்னித்திரை என்கிற ஒரு மெல்லிய ஜவ்வு (Hymen ) உடலுறவு துவாரத்தை மூடிக்கொண்டிருக்கும். முதல் முறை ஒரு ஆணின் குறி உங்கள் பெண்குறிக்குள் நுழையும்போது, அந்த ஜவ்வு கிழிந்து ரத்தம் வரும். ஆனால் பல பெண்கள் ஓடியாடி விளையாடினாலே கூட இந்த கன்னித்திரை கிழிந்து விடும். இதனால் உடலுறவுக்கு முன்னே பல பெண்களுக்கு சிறு வயதிலேயே கன்னித்திரை கிழிந்து விடுவதால் உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.
பெண்கள் வயசுக்கு வருவது எப்படி? பெண்கள் வயதுக்கு வருவது பற்றி, அவர்கள் உடல் வளர்ச்சி பற்றி நூற்றுக்கணக்கான கேள்விகள் வந்து குவிந்து கொண்டு இருக்கின்றன. ஆண்களை விட பெண்கள் தான் மருத்துவக் கேள்விகளை நிறையக் கேட்டு இருக்கிறார்கள்.
தமிழர்கள் பொதுவாக பெண்கள் வயதுக்கு வருவது என்றால் அவர்கள் முதல் முறையாக மாத விலக்கு வருவது என்று கருதுகிறோம். அவ்வாறு ஒரு பெண்ணுக்கு முதல் முறையாக மாத விலக்கு வந்துவிட்டாலே, அவள் முழுமையாக “பெரியவளாகி” விட்டால் என்று சொல்வார்கள், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கும்.
பெண்கள் உடல் ரீதியாக சிறுமிப் பருவத்தில் இருந்து, அவளே குழந்தை பெரும் பருவத்தை எய்துவது ஆங்கிலத்தில் ப்யூபர்ட்டி (Puberty) என்கிறார்கள். முதல் முறையாக மாத விடாய் வருவதை, (Menarche) பெண்களுக்கு ஏற்படும் வளர்ச்சியின் ஒரு சிறிய பகுதியாகவே மருத்துவ சமூகம் பார்க்கிறது. இப்போது நாம் பார்க்க இருப்பது, ஒரு பெண், சிறுமிப் பருவத்தில் இருந்து முழுமையாக பெரிய பெண் ஆகும் நிலைகள் பற்றியது:
குறிப்பு: ஒவ்வொரு பெண்ணுக்கும் பாரம்பரியம், உணவு முறைகளுக்கு ஏற்ப, இந்த வயதுகள் சற்றே வித்தியாசப்படும். நாம் இங்கே எடுத்துக்கொள்வது சராசரியான வயதுகளைத்தான்.
(9 – 10 வயது ): 1. பெண்கள் வேகமாக, உயரமாகவும், எடை கூடவும் ஆரம்பித்து விடுவார்கள்.
2. இந்த வயதில் அவர்களுக்கு முலை, மார்பு வளர்ச்சியோ, அல்லது அந்தரங்கப் பகுதியில் மயிர் வளர்ச்சியோ இருக்காது.
(10-11 வயது ): 1. இந்த வயதுகளில், பெண்ணுறுப்பின் மீது லேசாக முடி வளரத் தொடங்கும். பூனை முடி மறையத் தொடங்கி, லேசாக கருமுடியாக வளர ஆரம்பிக்கும்.
2. முலையைச் சுற்றி உள்ள கருவட்டம் பெரிதாக ஆரம்பிக்கும். மார்பு தசையும் லேசாக ஆரம்பித்து, முலை மெல்ல வெளியே புடைக்க ஆரம்பித்து விடும். இதனை முலை மொட்டு ( nipple buds ) என்று அழைப்பார்கள். 3. போன வயதுக்காலத்தில் நடக்கும் திடீர் உடல் வளர்ச்சி சற்றே மட்டுப்படும்.
(11 – 12 வயது ) : 1. கிட்டத்தட்ட 75% பெண்கள் இந்த வயதில் முதல் முறையாக மாத விடாய் வெளியேறி விடும். இதனை ஆங்கிலத்தில் Menarche என்று சொல்வார்கள். இதனைத் தான் நாம் பெண்கள் “வயதுக்கு வந்து விட்டதாக” கருதுகிறோம்.
பலர் பெண்ணுக்கு மாத விலக்கு ஆரம்பித்து விட்டாலே, அவள் கர்ப்பம் தரிக்க தயாரானவள் என்று நினைக்கிறார்கள், இது ஒரு தவறான கருத்தாகும். உண்மையில் பல பெண்கள் மாத விலக்கு வந்தாலும், சில வருடங்கள் கழித்தே கர்ப்பம் தரிக்க உடல் ரீதியாக தயாராவார்கள்.
2. முடி வளர்ச்சி பெண்குறி மேட்டிலும் (மதனமேடு), அதைச் சுற்றியும் நன்றாக வளரத்தொடங்கும்.
3. மார்பகங்கள் முலையைத் தாண்டியும், முலையை சுற்றிய கருவட்டத்தை தாண்டியும் நன்றாக வளரத் தொடங்கும்.