Home ஆரோக்கியம் கை அக்குளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க…

கை அக்குளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க…

52

அனைவரும் தங்கள் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒரு சிறு பிரச்சனை அக்குள் துர்நாற்றம். இந்த துர்நாற்றத்தைப் போக்க பலரும் நறுமண சென்ட்களின் உதவியை நாடி, தற்காலிகமாக துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெறுவர்; மேலும் இந்த நறுமண வாசம் பயன்படுத்துபவருக்கும் சுற்றியுள்ளவர்க்கும் தலைவலியையும், மேலும் பயன்படுத்துபவருக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

ஆகையால், இந்த துர்நாற்ற பிரச்சனைக்கு இயற்கை முறையில் என்னென்ன நிவாரண வழிகள் உள்ளன என்று இந்த பதிப்பினை படித்து அறியலாம்..!

1. ஆப்பிள் சிடர் வினிகர்..!

பெரும்பாலும் இந்த அக்குள் துர்நாற்றம் பாக்டிரியாவால் ஏற்படக் கூடியதாக உள்ளது. எனவே, ஆப்பிள் சிடர் வினிகரில் காட்டன் பஞ்சு அல்லது துணியை நனைத்து அக்குளை சுத்தம் செய்தால், துர்நாற்றத்தில் இருந்து விடுதலை பெறலாம்..! மேலும் இது உடலின் pH அளவைக் குறைத்து, துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது.

2. எலுமிச்சை..!

எந்தவொரு கறைக்கும் எலுமிச்சை சாறு நல்ல நிவாரணியாக விளங்குகிறது. இதே எலுமிச்சை சாறு உங்கள் அக்குளின் துர்நாற்றத்தைப் போக்கவும் உதவும். இந்த சாறினை அக்குளின் மீது தடவினால், இது உடலின் pH அளவை சமன் செய்து, துர்நாற்றத்தைப் போக்கும்..

3. ஆல்கஹால்..

ஆல்கஹால் அக்குளின் துர்நாற்றம் போக்க உதவும் ஒரு முக்கிய பொருளாகும். நீங்கள் பயன்படுத்தும் நறுமண சென்ட்கள் ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்பட்டதே! ஆகையால், ஆல்கஹாலை அக்குளில் தடவுவதால், அது துர்நாற்றத்தைப் போக்க உதவும்..

4. ரோஸ் வாட்டர்..

இந்த ரோஸ் வாட்டரை அக்குளில் தடவினால், அது துர்நாற்றத்தை நீக்கி, சுகந்தமான மணத்தை உண்டாக்கும்..

5. பேக்கிங் சோடா..

இதனை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் கலந்து அக்குளில் தேய்க்க, இது துர்நாற்றத்தை தூர விரட்டும்..

மேலும், தினசரி இருமுறை குளிப்பது, தூய்மையான ஆடைகளை அணிவது, ஆடைகளை துவைத்து உடுத்துவது போன்றவை, அக்குள் துர்நாற்றத்தை உங்களை அண்ட விடாமல், காக்கும்..!