அந்தரங்க கேள்வி பதில்கள்:எனக்கு வயது 18. எனது உறவுமுறைப் பெண் ஒருவருக்கு வயது 33. நெருங்கிய உறவினர். எனது வீட்டுக்கு அருகாமையில்தான் இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே அவர் என்னைத் தொட்டுப் பேச ஆரம்பித்திருக்கிறார். அழகானவர்தான். அவரது பார்வையும் வித்தியாசமாக இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?
பதில்:
நீங்கள் வயதுக்கு வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!
மாற்றமும் வித்தியாசமும் அவரிடம் இல்லை; உங்களிடம்தான் இருக்கிறது. நெருங்கிய உறவினர், வீட்டுக்கு அருகாமையிலேயே அவரது வீடும் இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே அதாவது, உங்களது குழந்தைப் பருவம் – முதலே அவர் உங்களை ஒரு சகோதரனாகவோ அல்லது தனது பிள்ளையாகவோ நினைத்துத்தான் பழகி வந்திருக்கிறார்.
ஆனால், குழந்தையாக இருந்த நீங்கள் குமரனாக மாறியதை உங்கள் மீதிருக்கும் அவரது அன்பு வித்தியாசமாகப் பார்க்கவில்லை.
அவருக்கு எப்போதும் உங்கள் மீது இருந்ததும் இருப்பதும் பாசம் மட்டுமே! அதனால்தான் இன்னும் உங்களை ஒரு குழந்தையாகவே பாவித்து உங்களிடம் அன்பு செலுத்தி வருகிறார்.
ஆனால், நீங்களோ நெஞ்சில் நஞ்சை வைத்துக்கொண்டு தாய்க்கு நிகரான ஒரு பெண்ணைத் தவறாக நினைக்க வைத்திருக்கிறது. நீங்கள் மட்டுமன்றி, உங்களைப் போன்றே உங்கள் வயதுடைய பலரும் இதுபோன்ற தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். அதன் விளைவுதான் முறைகேடான உறவுகளும் வன்புணர்வுகளும்!
பெண்களின் அளவு கடந்த அன்பை பாலுறவுக்கான அழைப்பு என்று தவறாக அர்த்தம் கொண்டு விடாதீர்கள். அவர்கள் ஆண்களைத் தம் சக மனிதர்களாக, அன்பு செலுத்தப்படவேண்டியவர்களாக எண்ணிப் பழகுகிறார்கள். பிறரை சந்தோஷப்படுத்துவதன் மூலம் தானும் சந்தோஷம் அடைய எண்ணும் அவர்களை, மீட்க முடியாத படுகுழியில் தள்ளிவிடாதீர்கள். உங்கள் வயதில் பாலுறவுக்கான நாட்டமும் ஆர்வமும் இருப்பது இயற்கையே! ஆனால், அன்பையும் பாலுறவுக்கான தேவையையும் பிரித்துப் பழக இப்போதிருந்தே முயற்சி செய்யுங்கள்.
கேள்வி
எனக்கு வயது 33. எனது மனைவிக்கு 29. திருமணமாகி மூன்று வருடங்கள். எனது மனைவி இரண்டு முறை கருத்தரித்தபோதும் அவை கலைந்துவிட்டன. பிரச்சினை என்னவென்றால், நான் எவ்வளவுதான் முயன்றாலும் என் மனைவிக்கு தாம்பத்தியத்தில் திருப்தி வருவதேயில்லை. இரவு வந்தாலே மனம் பயம் கொள்கிறது. மனைவியை நெருங்குகையில், அவரது முகத்தில் ஓர் அலட்சியம் தெரிவது போல் இருக்கிறது. இதனால் படுக்கையில் என்னால் எதையும் சாதிக்க முடியவில்லை. தாம்பத்தியம் சுகப்படாததால், வீட்டுக்குப் போவதே பெரும் தலைவலியாக இருக்கிறது. என்ன செய்வது?
பதில்
பேசுங்கள்.
‘உனக்குப் பிடித்த நிறம் என்ன?’, ‘உனக்குப் பிடித்த நடிகர் யார்?’ என்றெல்லாம் கேட்டுக் காதலிக்கத் தெரிந்த பலருக்கும், படுக்கையில் ‘உனக்கு என்ன பிடிக்கும்? எப்படிப் பிடிக்கும்?’ என்று கேட்பதற்கு மட்டும் வாய் வருவதில்லை. நாம் என்ன இன்னும் ‘பராசக்தி’ காலத்திலா இருக்கிறோம்? ‘2.0’ காலத்தில் இருக்கிறோம். இயந்திர மனிதனுக்கே காதல் வந்துவிட்டது. நீங்கள் என்னவென்றால்….!
படுக்கை என்பது கணவன் – மனைவி இருவரும் பரஸ்பரம் இன்பத்தைக் கொடுத்து வாங்கும் இடம்! ஒருவர் விருப்பத்துக்கு மற்றவர் மரியாதை செலுத்த வேண்டும். ஒருநாள் உங்களுக்குப் பிடித்த மாதிரி என்றால், மறுநாள் அவருக்குப் பிடித்த மாதிரி! இப்படியாக, சந்தோஷத்தை கொடுத்து வாங்க வேண்டும். அதற்கு, பரஸ்பரம் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.
‘படுக்கையில் என் மனைவி என்னை அலட்சியமாகப் பார்க்கிறார்’ என்கிறீர்களே…. ஹோட்டல் ஒன்றில் 150 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு தோசை உப்புச் சப்பில்லாமல் இருந்தால் உங்களுக்கு எப்படிக் கோபம் வருகிறது? அதுபோலத்தானே இதுவும்?
ஒருவேளை, இரண்டு முறை கருத்தரித்தும் அவை கலைந்தது கூட, காமத்தினால் உங்கள் மனைவியின் மனம் நிறைவுறாததனால்தானோ என்னவோ!
எனவே, முதலில் உங்கள் மனைவிக்கு என்ன வேண்டும், எப்படி வேண்டும் என்று கேட்டுக் கேட்டுப் பரிமாறுங்கள், தாம்பத்தியம் இனிக்கும்!