Home ஆண்கள் ஆண்களே நீங்கள் பயன்படுத்தும் சோப்பு ஆண்மை குறைவை ஏற்படுத்தும்?

ஆண்களே நீங்கள் பயன்படுத்தும் சோப்பு ஆண்மை குறைவை ஏற்படுத்தும்?

328

ஆண்மை அதிகரிப்பு:ஒரு மனுஷனுக்கு இப்படி யெல்லாமா சோதனை வருமா? இனிமையான தாம்பத்திய வாழ்க்கைக்கு சரியான உணவுப்பழக்கம் உடற்பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கை முறை மட்டுமே போதுமானதல்ல.

நீங்கள் நினைத்துக் கூட பார்த்திராத விஷயங்களும் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கின்றன. ஆமாம்…

குளியல் சோப்புகளில் இருக்கிற டிரைக்ளோஸன் என்கிற வேதிப்பொருள் ஆண்களிடம் பெண் தன்மையை உருவாக்கி தாம்பத்திய வாழ்க்கையை அழிக்கிறது என்று கூறியிருக்கிறது சமீபத்திய திகில் ஆய்வு ஒன்று.

இந்த டிரைக்ளோஸனை சோப் தயாரிப்பில் பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான FDA தடை விதிப்பதாகக் கூறியிருக்கிறது.

அலர்ட்டான வெளிநாட்டு சோப் தயாரிக்கும் நிறுவனங்கள் டிரைக்ளோஸன் என்ற பெயரைத் தங்களுடைய லேபிளில் இருந்து அகற்றத் தொடங்கியிருக்கிறது.

சரும நல மருத்துவர் ஒருவர் இந்த சர்ச்சை குறித்து கூறியதாவது, நுண் கிருமிகளை நீக்குவதற்காகப் பயனபடுத்தப்படும் ஒரு வேதிப்பொருள் தான் டிரைக்ளோஸன் (Triclosan).

மருத்துவத் துறையில் தொற்று அபாயம் அதிகம் என்பதால் மருத்துவர்கள் செவிலியர்களின் பயன்பாட்டுக்காகவே இந்த டிரைக்ளோஸன் கலந்த சோப்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதற்கு Medicated Soap என்றே பெயர்.

இது தெரிந்திருந்தும் இப்போது பொதுமக்கள் பயன் படுத்தும் குளியல் சோப்புகளிலும் ஷாம்புகளிலும் பாடிவாஷ்களிலும் டியோடரண்டுகளிலும் இந்த டிரைக்ளோஸனை கலந்து விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன் டூத் பேஸ்ட்டுகளில் கூட இப்போது டிரைக்ளோஸனை சேர்க்கிறார்கள்.

இது பெண் தன்மையை ஏற்படுத்தும் வேதிப்பொருள் என்பது உண்மை தான். ஆனால் அது அளவு கடந்து டிரைக்ளோஸனைப் பயன்படுத்தும் போது தான்.

இந்தியாவில் விற்கப்படுகிற சோப்புகளைப் பொறுத்த வரை குறைந்த அளவிலேயே டிரைக்ளோஸன் சேர்க்கப் படுகிறது.

நாம் பயப்படுகிற அளவுக்கு டிரைக்ளோஸன் நம் சோப்புகளில் இல்லை.

இதனால் தைராய்டு குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.