Home சூடான செய்திகள் இளைஞர்களின் செக்ஸ் ஆர்வ வயது குறைந்து வருகிறது…!!

இளைஞர்களின் செக்ஸ் ஆர்வ வயது குறைந்து வருகிறது…!!

18

கடந்த சில ஆண்டுகளில் சமூக நடைமுறைகள் மற்றும் பாலியல் விதிமுறைகளில் ஏகப்பட்ட மாறுதல்கள் நடந்துள்ளன. அசூயையாகக் கருதப்பட்டவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.செக்ஸில் தாராளவாத வெள்ளம் பாய்ந்துவிட்டது. திருமணம் வரை செக்ஸுக்காகக் காத்திருப்பது எல்லாம் கடந்தகால நடைமுறைகள். செக்ஸ் கிடைப்பது அத்தனை சிரமமானதல்ல. எளிமையாகவும், கட்டுப்பாடற்றும் கிடைக்கும் வஸ்துவாக மாறிவிட்டது.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் திருப்தியை விரும்புகின்றனர். பள்ளிப் பைகளில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளைக் காணமுடிகிறது. பெருநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்கள், கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் கட்டற்ற காமம் பரவிவருகிறது.

இது வெறுமனே சூழ்நிலையின் ஒரு கோணத்தைத்தான் காண்பிக்கிறது. இதன் பின்விளைவுகள் மிகவும் பாதகமானவை. பாலுறவின் ஆயுள் அபாயத்தில் உள்ளது. முன்பெல்லாம் 40 வயதில் ஒருவருக்கு பாலியல் ஆரோக்கியம் குறையுமானால், தற்போது 30 வயதிலேயே அந்நிலை ஏற்படுகிறது. பணிரீதியான அழுத்தமும் கடுமையான ஆற்றலைக் கோரும் வாழ்க்கையும் செக்ஸைப் பின்தள்ளிவிட்டன. தம்பதிகளில் இருவரும் பணிக்குச் செல்லும்போது நிலைமை இன்னும் மோசமடைந்து விடுகிறது.

அடிக்கடி மாறுதல்கள், வேலைத்திறன் சார்ந்த மதிப்பிடுதலின் அழுத்தங்கள், மனஅழுத்தம், பொருளாதாரப் பாதுகாப்பின்மையால் ஏற்படும் கவலைகள் சமூகவெளிகள் இல்லாமல் ஆவது, நெருங்கிய உறவுகளிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருப்பது ஆகியவற்றின் தாக்கம் படுக்கை அறையிலும் பிரதிபலிக்கிறது.
அமித் கௌரி தம்பதியினரை எடுத்துக்கொள்வோம். இருவரும் ஊடகத்தில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த மூன்று மாதங்களாக அமித் காலை ஷிப்டில் வேலைக்குப் போகிறார். கௌரி தனது செய்தித்தாள் பணியிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு வீடு திரும்புவார். அவர் வீட்டுக்கு வரும்போது அமித் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். அவர் வேலைக்குக் கிளம்பும்போது கௌரி உறங்கிக்கொண்டிருப்பார்.நாங்கள் எப்போதாவது உடலுறவு கொண்டாலும் அவசரமாகவும் அசிங்கமாகவும் இருக்கும். முழுமையான உடலுறவு இன்பத்தை அனுபவிக்க ஒரு நாள் விடுமுறை தேவையாக உள்ளது

அகமதாபாத்தைச் சேர்ந்த டிஎம் மனநல மையத்தின் முன்னாள் மருத்துவ உளவியலாளரான சுரேஷ் மஜும்தார், “கடுமையான பணிச் சூழ்நிலைகள் மிக அதிகமாகப் பாதிக்கின்றன. மொபைல் தொலைபேசிகளும், கணிப்பொறிகளும் வாழ்க்கையை மாற்றிவிட்டன. நமது வாழ்க்கையை எளிமையாக அவை ஆக்கும் அதேநேரத்தில், கூடுதலான பிரச்னைகளையும் ஏற்படுத்தியுள்ளன. ஒரு நாளைக்கு 17 முதல் 18 மணிநேரம் வேலை செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. யாரும் தமக்காக ஒதுக்குவதற்கு நேரம் இல்லாமல் அவதிப் படுகின்றனர்.

இதனால் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் களைப்படைந்து விடுகின்றனர். இவை அனைத்துமே ஒருவரின் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும். இதனால் நிறையப்பேர் மதுவை நாடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் இது பிரச்னையை அதிகரிக்கவே செய்கின்றது”

பாலுறவுக்கான உந்துதல் இளம்வயதிலேயே தொடங்கிவிடுகிறது. சீக்கிரமாக பாலுறவு ஆரம்பிப்பதும் அதன் துரித முடிவுக்கு வழிவகுக்கிறது. பாலியல்ரீதியான குறைபாடு எதுவும் இல்லாவிட்டால் எல்லோரும் எந்த வயதிலும் செக்ஸைஅனுபவிக்கலாம். ஒருவருக்கு சிறுவயதிலேயே பாலுறவு உந்துதல் தொடங்கிவிட்டால் சீக்கிரமே அந்த உந்துதல் மங்கவும் தொடங்குகிறது’

ஆரோக்கியமான பாலுறவு வாழ்வுக்கு ஆரோக்கியமான உடலும், அமைதியான மனமும் அவசியம். வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள்தான் பாலுறவு இச்சையை மங்கவைக்கிறது என்கிறார் புதுடெல்லியில் உள்ள ஹார்ட்கேர் பவுண்டேஷனைச் சேர்ந்த மருத்துவர் கே.கே. அகர்வால். ஒருவர் தன் ஆரோக்கியம் பற்றி கவனிப்பேஇல்லாமல் இருப்பது மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இளைஞர்களை நீரிழிவும் இதயநோய்களும் தாக்கிவருவது அதிகரித்துள்ளது. இந்நோய்கள் ஒருவரது பாலியல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்”

சந்தோஷம் மற்றும் திருப்தியான வாழ்க்கையை வாழ தீயை அணையாமல் காப்பற்றவேண்டியது அவசியமானது.