ஏறத்தாழ வேலை கிடைப்பதற்கு முன்னர் இன்டர்ன்ஷிப் போவது போல தான் காதலுக்கு முன்னர் டேட்டிங்கும். அதே பெண்ணுடன் காதலில் இணையவும் வாய்ப்புகள் உண்டு. அல்லது டேட்டிங் உடன் நின்று, வேறு பெண்ணுடன் காதலில் இணையவும் வாய்ப்புகள் அமையலாம்.
அப்படி நீங்கள் முதல் முறையாக ஒரு பெண்ணை டேட் செய்வதாக இருந்தால் இந்த 7 கேள்விகளை முன்கூட்டியே கேட்க வேண்டியது அவசியம்…
கடைசியாக பார்த்த படம் என்ன? இதற்கு பதில் தெரிந்துக் கொண்டால், அவருக்கு பிடிக்காத படத்திற்கு அழைத்து சென்று மொக்கை வாங்காமல் இருக்கலாம்.
நீங்க என்ன வேலை பண்றீங்க? முதல் சந்திப்பிலேயே வேலை பற்றி பேசுவது தவறு தான். ஆனால், என்ன வேலை என்று தெரிந்துக் கொண்டால். நாம் சற்று சூதானமாக பதில் அளிக்க உதவியாக இருக்கும். அல்லது அவருக்கே ஏதேனும் குறிப்புகள் கூறி அசத்தலாம்.
உங்க நேட்டிவ் என்ன? அவர் பிறந்த ஊர் பற்றி கேட்டு அறிந்து கொள்வது. அவரை பற்றி அறிந்துக் கொள்ள, புதிய விஷயங்கள் பேச சௌகரியமாக இருக்கும்.
பிடித்தவை? அவருக்கு பிடித்தவை பற்றி கேட்பதால், அவருக்கு பிடிக்காதவை பற்றியும் மறைமுகமாக அறிந்துக் கொள்ள முடியும். இதனால் நீங்கள் அவரை மூட்-அவுட் செய்யாமல் இருக்க முடியும்.
விடுமுறை கொண்டாட்டம்? விடுமுறை நாட்களில் என்ன செய்வீர்கள், எங்கு செல்வீர்கள் என கேட்டறிந்துக் கொள்வதால், நீங்கள் அடுத்த டேட்டிங் செல்ல சிறந்த இடத்தை நீங்களே அவருக்கு பிடித்த மாதிரி தேர்வு செய்து அசத்தலாம்.
திறமைகள்? அவரது திறமைகள் பற்றி கேட்டறிந்து கொள்வதால், அதை பற்றி சந்தேகங்கள் கேட்பது போல கேள்விகள் கேட்டு அவர் பதில் கூறும் போது பாராட்டி அவரை வெட்கப்பட வைக்கலாம்.
முதல் முத்தம்? இது ஒரு 50:50 கேள்வி. நீங்கள் கேட்கும் விதத்தில் தான் இருக்கிறது. ஏடாகூடமான தோரணையில் கேட்டால் டேட்டிங்கே கேன்சல் ஆகிவிடும்.