காதலர்கள் மணிக்கணக்கில் ஸ்வீட் நத்திங்ஸ் பேசுவார்கள். அதேசமயம் திருமணம் ஆன தம்பதியர் அது போல பேசுவார்கள் என்று கூற முடியாது. திருமணம் ஆன மறுநாள் தொடங்கியே அவர்களுக்கு குடும்ப பொறுப்புகள் வந்து விடும். இருவரும் பேசிக்கொள்வதற்கு தனியாக சில மணிநேரங்களைக்கூட ஒதுக்க முடியாத அளவிற்கு சுமைகள் கூடி விடும். எனவே தம்பதியர் தங்களுக்கு என நேரத்தை ஒதுக்கி பேசுங்கள். அப்பொழுதுதான் தாம்பத்ய வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கூச்சத்தை விடுங்கள்
காதல் வாழ்க்கையில் கூச்சம்தான் முதல் எதிரி எனவே இருவருமே கூச்சத்தை கைவிடுங்கள். தயக்கமில்லாமல் காதல் பாஷைகளை பரிமாறிக்கொள்ளுங்கள். இந்த பேச்சுதான் உங்கள் காதல் உணர்வுகளின் கிளர்ச்சியை அதிகரிக்கும்.
காதலை வெளிப்படுத்துங்கள்
எந்த ஒரு விசயத்தையுமே வெளிப்படுத்தினால்தான் தெரியும். செக்ஸ் விசயத்தில் உங்கள் தேவை என்னவோ அதை தெளிவாக தெரிவியுங்கள். அப்பொழுதுதான் இருவராலும் திருப்தியாக செயல்பட முடியும்.
துணையை புகழுங்கள்
புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. உங்கள் வாழ்க்கைத் துணை உட்பட. எனவே உங்கள் துணையை நன்றாக ரசித்து புகழுங்கள் வெட்கத்தில் முகம் குங்குமமாய் சிவக்கும். உங்கள் மீதான காதல் உணர்வுகளும் அதிகரிக்கும்.
புதிய யுக்திகளை கையாளுங்கள்
ரொமான்ஸ் என்றாலே தினம் தினம் புதிதாய் இருந்தால் உற்சாகம் பற்றிக்கொள்ளும். புதிதாக, கிரியேட்டிவாக நீங்கள் செய்யும் செயல்கள் உங்கள் துணையை மகிழ்விக்கும். தினந்தோறும் ஒரே மாதிரியாக இருப்பது போராடித்து விடும் அல்லவா? எனவே தாம்பத்ய உறவின்போது புதிய யுக்தியை கையாளுங்கள்.