Daily bedshare with wife:ஆண், பெண் உறவு என்பது , ஏதோ உணர்ச்சியின் வெளிப்பாடு என்பதை கடந்து அது உடல் மற்றும் மனோவியல் ரீதியிலான உந்துசக்தி என்பதனை நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும். கலவி(sex) பற்றிய பேச்சுக்களை கூட எமதுசமூகத்தினர் புறம்தள்ளி, ஏதோ ஒரு தீய பழக்கம் என்பது போல பார்த்து வருகின்றனர். அத்துடன் ஆணும் பெண்ணும் உறவு கொள்வது மற்றும் அது பற்றிய சந்தேகங்கள் மற்றும்தெளிவு படுத்தல் போன்றவற்றை கலந்தாலோசிப்பதை கூட தவிர்க்கும் பின் தங்கிய சமூகத்தில் நாம் இன்னமும் வாழ்ந்து வருகின்றோம்.
கலாச்சார சீர்கேடுகளை தவிர்க்கும் விதமாக எமது முன்னோர்கள் பல்வகை கட்டுப்பாடுகளை விதித்து கலவி சார் உடலியல் பற்றிய அடிப்படை தெளிதல்களை கூட தெரிந்திடாத அளவில் நமக்கு முந்தய தலைமுறையினரை வழிநடாத்தியுள்ளனர் என்பது மறுத்துவிட முடியாது. ஆயினும் நாகரிக வளர்ச்சி என்ற வகையில் பாடசாலை கல்வியின் போதே இனபெருக்கம் , கலவி சார் அறிவுறுத்தல்களை இளைய சமுதாயத்தினருக்கு தெளிவுபடுத்தும் அளவுக்கு வளர்ச்சி கண்டுவிட்டது நமது சமூகம்.
எவ்வாறாயினும் கலாச்சாரம், பண்பாடு என்பனவற்றினை கடந்து பண்டைய காலம் தொட்டு கலவி என்பது கட்டாயம் அறியப்படவேண்டிய , கடைபிடிக்கப்படுகின்ற ஒரு முக்கிய விடயமாகவே இருந்துவருகின்றது . சூத்திரங்கள், மரபுகள் பின்பற்றுதல்கள், என்ற வகையில் வெவேறு ரூபங்களில் கலவி என்பது தெய்வாதீனமாக கூட இருந்து வருவது மனிதனுக்கு அதில் உள்ள உள்ள முக்கியத்துவத்தினை பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றது..
எவ்வாறாயினும் விஞ்ஞான ரீதியிலும் கூட கலவி என்பதன் முக்கியத்துவம் தற்காலத்தில் பெருமளவில் அறிவுறுத்தப்பட்டும் , நிரூபிக்கப்பட்டும், தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் எமது உடல் ஆரோக்கியத்திற்கு கலவி என்பது எவ்வாறு இன்றியமையாத ஒன்று என்பதை விளக்கி கூற சில காரணிகள் இங்கே காட்டப்படுகின்றது.
கலவி உங்களை மகிழ்ச்சியாக்கும்.
கலவியில் ஈடுபடுவது மட்டுமல்ல பலரும் சுய இன்பம் பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாக கூறுகின்றனர். எவ்வாறாயினும் சுய இன்பத்தினால் பெறப்படும் மகிழ்வு நிலையினை விட தக்க துணையுடனான கலவியின் மூலம் நாம் மேலும் மகிழ்வாக இருப்பதாக விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது மனிதனது உடலில் இருக்கும் பல்வகை சுரப்பிக்களில் ஒன்று ஆக்சிடாஸின் என்ற ஹார்மோன் சுரப்பி (oxytocin) இது எமது உடலெங்கினும் பரவலாக சுரக்க கூடியது . இந்த ஹார்மோனை மன அழுத்தத்தினை குறைக்கும் ஹார்மோன் சுரப்பியாக கூறலாம். கலவியின் போது உச்ச இன்ப நிலையினை பெறுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த ஹார்மோன் பெருவாரியாக சுரக்கின்றது என அறியப்பட்டுள்ளது. எனவே உச்சநிலையினைஅடையும் சந்தர்ப்பத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணி என அறியப்பட்டுள்ளது.
இந்த சுரப்பியானது கலவியின் போதான உச்சநிலையினைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்பதனை இந்திய கலவி மருத்துவ ஆய்வாளர் Debby Herbenick, PhD தெரிவித்துள்ளார். அவ்வாறே ஆக்சிடாஸின் சுரப்பானது மற்றைய நிலைகளை விட கலவியின் உச்ச நிலையிலும், சுயஇன்ப நிலையிலும் அதிகளவில் சுரப்பதாகவும் இனம்காணப்பட்டுள்ளதாக இவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே உச்ச இன்பத்தின் பின்னர் துணையின் அரவணைபில் இருத்தல் என்பது கலவியின் போது பலராலும் விரும்பப்படுவது. இது மருத்துவ ஆய்வுகளின் மூலம் இன்பத்தின் இன்னுமொரு வெளிப்பாடாக இந்த அரவனைப்ப்பின் ஆறுதலை குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்.
பெண்கள் கலவியின் உச்சநிலையில் போது ஆக்சிடாஸின் சுரப்பினை மிகவும் வேகமாக பெற்றுவிடுகின்றன. இதன் வேகமானது உடலில் தங்கி செல்வதற்கு குறைந்தளவு 10 நிமிடமேனும் எடுப்பதாக அறியப்படுகின்றது என்பதால் கலவியில் பின்னரான அரவணைப்பினை பெண்கள் விரும்புகின்றனர். இதுவே அவர்களை மனோவியல் ரீதியில் திருப்தியடைய செய்வதாகவும் விஞ்ஞான ரீதியில் கண்டறியப்பட்டுள்ளது. அப்போதான அரவணைப்பு, வருடல், ஸ்பரிசம் போன்றனவும் மனோவியல் திருப்தியினை அதிகப்படுத்துவதாக அறியப்படுகின்றது.
பாலின புற்றுநோய்க்கான ஆபத்தினை குறைக்கும்.
எமது பாலுறுப்புகளில் ஏற்படக்கூடிய முன்னிற்கும் சுரப்பு புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளிட்டவை முறையான கலவிக்கொள்வதன் மூலம் எமக்கு ஏற்படுத்தவுள்ள ஆபத்து நிலையினை குறைப்பதாக அறியப்படுகின்றது.
போஸ்டன் பல்கலைக்கழகத்தின் பொதுநலன் தொடர்பான ஆய்வுகளின் மூலம் கலவி கொள்வதன் மூலம் முன்னிற்கும் சுரப்பி புற்றுநோய் வரக்கூடிய ஆபத்து வெகுவாக குறைக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கென 18 வயதுக்கு மேற்பட்ட 32000 ஆண்களைக் கொண்டு அவர்களின் விந்து வெளியேற்றத்தின் பரம்பலினை அடிப்படையாக வைத்து மருத்துவ ஆய்வினை நடத்தியுள்ளனர். இவர்களில் 20 இருக்கும் 29 இருக்கும் இடைப்பட்ட வயதினருக்கு முன்னிற்கும் சுரப்பியின் மூலமான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து 19% சதவீதிதம் குறைவாகவே இருப்பதாக ஆய்வின் மூலம் இனம்காணப்பட்டுள்ளது. இந்த வயதெல்லைக்குட்பட்டவர்கள் மாதம் 21 முறை விந்து வெளியேற்றத்தினை அண்ணளவாக கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையானது வயதான ஆண்களை விட அதிகமாகும் என இனம்காணப்பட்டுள்ளது. 40 வயதிற்கும் 49 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்களின் விந்து வெளியேற்ற பரம்பலை கொண்டு அவர்களுக்கு முன்னிற்கும் சுரப்பி புற்றுநோய் ஏற்படுவது 2% சதவீதம் மாத்திரமே குறைவாகவுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இதற்கான காரணியாக அதிகபட்ச விந்து வெளியேற்றமானது புதிய விந்துக்களின் உருவாக்கத்தினை தூண்டுவதாக உள்ளது. இதன் காரணமாக புற்றுநோயினை ஏற்படுத்தும் கிருமியின் செயல்பாடானது மட்டுப்படுத்தப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
அவ்வாறே சுயஇன்பம் மூலமான விந்துவெளியேறமும் புற்றுநோய்க்கான வாய்ப்பினை கணிசமாகவே கட்டுப்படுத்துவதாக இனம்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலையின் போதான மன இறுக்கத்தினை குறைக்கின்றது.
அண்மையில் journal of Management சஞ்சிகையில் முகாமைத்துவ கட்டுரையொன்றில் சிறந்த கலவி நிலை வாழ்வியலானது உங்கள் வாழ்க்கையை சிறந்த உருவாக்கித்தருவது மட்டுமல்ல தொழில்நிலையிலான வெற்றிகளையும் ஏற்படுத்த வல்லது என கண்டறியப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஒரேகான் மாநில பல்கலைக்கழகத்தில் வாழ்வியல்த்துறையகம் 159 திருமணமான தொழில் புரியும் நபர்களை வைத்து இது தொடர்பான ஆய்வொன்றினை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் திருமணமாகி, சிறந்த முறையான கலவிமுறை வாழ்க்கைநிலையினை வாழும் நபர்களே தொழில் நிலையில் முன்னேற்றமும், தொழில் சார்ந்த சிறந்த வளர்ச்சி பெறுபேற்றினையும் அடைந்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் கண்விழித்து, அலுவலக வேலைகளில் மாத்திரம் கரிசனையுடன் இருக்கக்கூடிய பல்வேறு நபர்களும் மன அழுத்தம் மற்றும் பல்வேறு அனர்த்த நிலைகளுக்கு அடிக்கடி முகம்கொடுக்க வேண்டி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
“புத்துணர்வான காலை” என்பது அனைத்து மனிதனுக்கும் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். காலை எழும்பும்போது நமக்கு புத்துணர்வு நிலை ஏற்படுவதற்கு எமது உடலியக்க தொழிற்பாடுகள் செம்மைத்தன்மைக்கும், உடலில் உள்ள சுரப்புக்களின் இயக்கப்பாடு சீராக இருக்க வேண்டியது அவசியம். உடலில் உள்ள அனைத்து சுரப்புக்களுக்கும் உந்துசக்தி அளிப்பதாக இருக்கும் பிரதான ஹார்மோனாக இருப்பது ஆக்ஸிடோசின் மற்றும் டோப்பமைன் ஆகிய சுரப்பிகளாகும். இவை கலவி நிலையில் சீராக சுரப்பிதான் காரணமாக உடல் காலங்கள் அனைத்தும் சீராக பணியாற்ற தொடங்குவதுதான் புத்துணர்வு நிலயினை உடலுக்கு தருகின்றது. எனவே விடியும் காலை புத்துணர்ச்சியுடன் இருப்பதால் தொடரும் வேலைகளும் விளைத்திறனாக இருக்கின்றது.
நல்ல உறக்கத்தினை தரக்கூடியது.
துணையுடனான கலவியின் பின்னர் ஒருசிலருக்கு நல்ல தூக்கம் வருகின்றது என்பதனை பல்வேறு ஆய்வுக்களிலும், நடைமுறையிலும் காணக்கூடியதாயுள்ளது.
கலவியின் உச்ச நிலையின்போது ஆக்ஸிடோசின் சுரப்பியினைப் போன்று ப்ரோலாக்டின் மற்றும் டோபமைன் ஆகிய சுரப்பிகள் நரம்பியல் கடத்துகளில் புத்துணர்வை அளிக்க கூடியதாயுள்ளது. இதன்காரணமாக ஆண்களுக்கு கலவியின் உச்சநிலைக்குப் பின் ஒரு அசதி மற்றும் தூக்கநிலை தூண்டப்படுகிறது. இதனால் கண்டிப்பாக ஒய்வு எடுக்க வேண்டி நேரிடுகின்றது. அவ்வகையான உடலுக்கு அளிக்கப்படும் ஓய்வும் உறக்கமும் உடலியக்க செயற்பாடுகளுக்கு புத்துணர்வினை அளிக்கின்றது.
அடிக்கடி கலவி கொள்ளுவது இதயத்தை பாதுகாக்கும்.
ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களைக்கொண்டு கடந்த 16 வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவின் இதய நோய்கள் சார் கற்றல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு 2 அல்லது 3 தடவைகளுக்கு மேலாக கலவியில் ஈடுபடுபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவது ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) செய்துள்ள பரிந்துரையின்படி இதயத்தை பாதுகாப்பதற்கென வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடல் பயிற்சி மேற்கொள்வது அவசியம் ஆகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது . அது கலவி உள்ளடங்களாகவே குறிப்பிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறே உங்கள் துணையுடனான கலவி அதிகரிக்கப்படும் போது அவருடனான நெருக்கமான உறவினை பேணலாம் என கூறப்படுகின்றது. இது பெரும்பாலும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணிகளை கட்டுப்படுத்தக்கூடியதாக அறியப்படுகின்றது.
உங்களது சிறந்த துணையின் மூலம் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மகிழ்வான தருணங்கள் அதிகப்படுத்தப்படுவதாக இனம்காணப்பட்டுள்ளது. இந்த நேர்மறையான வெளிப்படுத்தலின் மூலம் மன அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கட்டுப்படுத்தவும் படுகின்றது என கூறப்படுகின்றது.
கலவி கொள்வது என்பதில் காணப்பட்ட கூச்சநிலை, மற்றும் அருவருப்பு, போன்ற விடயங்களைக் கடந்து தற்பொழுது கலவி பற்றிய சிறந்த தெளிவுபடுத்தல்களின் மூலம் எமது உடலின் ஆரோக்கியத்தை சரியான முறையின் பேணலாம் என்பது அறியப்படுகின்றது. எவ்வாறாயினும் பாதுகாப்பானதும், முறையானதுமான கலவி நிலைகளே எந்த வகையிலும் உடலுக்கும்,சமூகத்திற்கும் நன்மை பயக்கும் என்ற அடிப்படை விடயத்தினை கண்டிப்பாக யாரும் மறந்த்துவிட கூடாது என்பது வலியுறுத்தப்படுகின்றது.