Home பெண்கள் உடல் கட்டுப்பாடு தினமும் இந்த டயட்டை பாலோ செய்தால் ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கலாம்..!

தினமும் இந்த டயட்டை பாலோ செய்தால் ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கலாம்..!

37

பாலோ டயட் மூலம் இலகுவாக உடல் எடையை குறைக்க முடியும் என சில வருடங்கள் முன்பு பத்திரிக்கைகளில் நீங்கள் வாசித்திருக்கக்கூடும்,

ஆம் இன்று பல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அதனை நிரூபித்துள்ளனர். உண்மையில் இந்த டயட்டில் உள்ள உணவுகள் மிக இலகுவில் பெற்றுக்கொள்ள கூடியவையாகும்.

அது தான் இந்த டயட்டின் சிறப்பான அம்சமொன்றாகும் பிரதானமாக இந்த டயட் காபோவைதரெட்டு மற்றும் கொழுப்பு சத்து அடங்கிய பதப்படுத்தப்பட்ட உணவுகளையே தடுக்கிறது.

இதன் மூலம் சிறப்பானதொரு உடல் கட்டமைப்பையும் ஆரோக்கியமான உடல் தொழிற்பாட்டையும் பெறலாம்
.
டயட் ஒன்றில் ஒருவர் தொழிற்படுவதில் உள்ள பிரதான சிக்கல் டயட் திட்டமொன்றை உருவாக்குதலாகும் அவ்வாறு சரியான திட்டமொன்றை உருவாகுமிடத்து அது சரியான டயட்டில் ஒருவர் இயங்க உதவி புரியும்.

பாலோ டயட்டுக்கான ஒரு வார திட்டம்

திங்கள்கிழமை

காலை உணவு : 2 முட்டைகள் கொஞ்சம் திராட்சை பழங்கள்

மதிய உணவு : தேசிக்காய் சேர்த்து வறுத்த பூக்கோவா மற்றும் ஒலிவ் எண்ணெய் சேர்த்த பச்சை காய்கறிகள்

இரவு உணவு : அவித்த கீரையுடன் சுடப்பட்ட மாட்டிறைச்சி

செவ்வாய்க்கிழமை

காலையுணவு: பழங்கள் மற்றும் 3 துண்டு பன்றி இறைச்சி

மதிய உணவு:பச்சை காய்கறிகள் மற்றும் ஆணைக்கொய்யா சேர்த்த மாட்டின் எலும்புடன் சேர்ந்த இறைச்சி

இரவு உணவு: பன்றி இறைச்சி மற்றும் கோழி இறைச்சி அத்துடன் இனிப்பான உருளைகிழங்கு

புதன்கிழமை

காலையுணவு: 2 முட்டைகளுடன் ஒரு ஆப்பிள்

மதிய உணவு: நெஞ்சு பகுதி கோழி இறைச்சியுடன் அவித்த உருளைகிழக்கு

இரவு உணவு: நசித்த பூக்கோவா உடன் இறைச்சி உருண்டைகள்

வியாழக்கிழமை

காலையுணவு: பிடித்தமான பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பானம்

மதிய உணவு: அவித்த கோழி இறைச்சி துண்டுகள் சில

இரவு உணவு: பழச்சாறு சேர்த்த ஸ்பகெத்தி

வெள்ளிக்கிழமை

காலையுணவு: கரட்டினால் செய்யப்பட்ட முபீன் என்ற ஒரு வகை அப்பம்

மதிய உணவு: பச்சை காய்கறிகள் சேர்த்த ஒரு சாலட்

இரவு உணவு: சுடப்பட்ட கோழி இறைச்சி

சனிக்கிழமை

காலையுணவு: பழங்கள் மற்றும் பன்றி இறைச்சி துண்டுகள்

மதிய உணவு: மாட்டிறைச்சி மற்றும் வதக்கிய மரக்கறிகள்

இரவு உணவு: சுடப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் சில மரக்கறிகள்

ஞாயிற்றுக்கிழமை

காலையுணவு: 2 முட்டைகள்

மதிய உணவு: பன்றி இறைச்சி மற்றும் சில மரக்கறிகள்

இரவு உணவு: மாட்டிறைச்சி பர்கர்ஸ்

• மேலும் இந்த டயட்டில் தவிர்க்க வேண்டிய சில உணவு பொருட்கள் உள்ளன,அவையாவன,

 பதப்படுத்தப்பட்ட சீனி

 மரக்கறி எண்ணெய், சோயா எண்ணெய்,சோள எண்ணெய்

 அரிசி மாவு, சோளம் என்பனவும் இவை அடங்கிய பாண், பாஸ்டா என்பன

 பசும்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகள்

 சோடா, பர்கர்ஸ், பீட்சா போன்ற தேவையற்ற நொறுக்கி உணவுகள்

 மதுபானம்

• இந்த டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள்

 உருளைக்கிழங்கு மற்றும் மரக்கறிகள்

 வாழைப்பழம் மாம்பழம் அன்னாசிப்பழம் போன்ற சகல வகையான பழங்கள்

 பச்சை பருப்பு,கடலை வகைகள்

 மீன் மற்றும் கடலுணவு வகைகள்

 முட்டை –