பாலியல் தகவல்:‘படுக்கை அறையில் டி.வி. இருந்தால், தம்பதிகள் அதில் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே இருந்தால், அவர்களுக்குள் தாம்பத்திய ஆசை குறைந்துவிடும்’ என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
‘நாள் முழுவதுமான பரபரப்பான வேலைக்குப் பின்பு வீட்டில் படுக்கையில் சாய்ந்தபடி டி.வி. நிகழ்ச்சியை கண்டுகளிப்பது போல ரிலாக்ஸ் அளிப்பது எதுவும் இல்லை’ என்று சிலர் சொல்வார்கள். அப்படி சொல்பவர்கள் திருமணமாகாதவர்களாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் திருமணமானவராய் இருந்தால்தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.
இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ‘ படுக்கையறையில் டி.வி. இல்லாத தம்பதிகளுடன் ஒப்பிடும்போது, படுக்கையறையில் டி.வி. உள்ள தம்பதிகள் பாதி எண்ணிக்கையில்தான் தாம்பத்தியம் வைத்துக்கொள்வதாக’ தெரியவந்திருக்கிறது. அங்கே அவர்களது மனம் கவர்ந்த டி.வி., தாம்பத்திய சங்கீதத்தில் குறுக்கீடு செய்துவிடு கிறது.
இங்கிலாந்து ஆய்வு முடிவை பல்வேறு நாட்டினர் ஒத்துக்கொள்ளவே செய்கிறார்கள். இதில் இந்தியர்கள் நிலை என்னவாம்?
வீட்டில் எங்கு வேண்டுமானாலும் டி.வி.யைவைத்து நிகழ்ச்சிகளை பாருங்கள். ஆனால் அதை படுக்கை அறைக்குள் மட்டும் நுழையவிடாதீர்கள். படுக்கை அறையில் உள்ள டி.வி., உங்கள் தாம்பத்திய வாழ்க்கையைச் சிதைத்து விடுகிறது. வீட்டில் ஒவ்வொரு அறையிலும் ஒரு டி.வி. வைப்பது இப்போது பேஷனாகிவிட்டது. அதன் விளைவு, தம்பதிகளுக்கு டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குத்தான் நேரம் இருக் கிறதே தவிர, தங்களுக்குள் பேச நேரம் இல்லாமல் ஆக்கிவிடு கிறது. பேசவே நேரம் இல்லாத படுக்கை அறையில் தாம்பத்தியம் திருப்தியாக அரங்கேறுவது கடினம்.
படுக்கையறையில் கொஞ்ச நேரம் ரிலாக்சாக டி.வி. பார்ப்பதில் தவறில்லையே? சொல்லப் போனால் பாலியல் ஆர்வத்தை தூண்டும் படம் ஒன்றை பார்த்தால் ‘மூடு’ வருமே என்று சிலர் வாதிடுகிறார்கள். நிஜத்தில் அவ்வாறு நடப்பதில்லை என்பதே உண்மை.
படுக்கை அறையில் இருந்து டி.வி.யை அப்புறப்படுத்துவது சரியான முடிவுதான். டி.வி.யும் மதுபானம் போலத்தான். ஆசையைத் தூண்டும், ஆனால் செயல்பட விடாது. நீங்கள் டி.வி.யை பொது அறையிலேயே வையுங்கள். அப்போதுதான் நீங்கள் குடும்பத்தினருடன் அதைப் பகிர்ந்துகொள்வீர்கள். படுக்கையறை நீங்கள் மட்டுமே ஆசை என்கிற பசியை போக்கும் இடமாக இருக்கட்டும். நீங்கள் சராசரியாக ஒருநாளைக்கு 6 மணி நேரம் டி.வி. பார்க்கிறீர்கள் என்றால், அதை 3 மணி நேரமாகக் குறைக்கலாம். டி.வி.க்கு ஒதுக்கும் நேரத்தைக் குறைத்து, ஜோடியாக கழிக்கும் நேரத்தைக் கூட்டுங்கள்.
இது தம்பதிகள் மிகவும் கவனிக்கவேண்டிய விஷயம்தான்!