பாலியல் உறவு:மனித வாழ்க்கைக்கு உணவு, காற்று, நீர் போல உடலுறவும் முக்கியமான ஒன்றுதான். பெரும்பாலும் இதில் நாட்டமில்லாதவர்கள் மிகவும் குறைவுதான். இருப்பினும் சிலர் உடலுறவில் நாட்டமின்றியோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்து வருவார்கள். இதனால் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்று அவர்கள் நினைக்கலாம், ஆனால் அதுதான் தவறு.
அதிகமாக உடலுறவில் ஈடுபடுவதை போலவே உடலுறவில் ஈடுபடாமலே இருப்பதும் கூட பல மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். சிலசமயம் உயிர்போகும் நிலைமை கூட ஏற்படலாம். இங்கே உடலுறவில் ஈடுபடமால் இருந்தால் உடளவிலும், மனதளவிலும் ஏற்படக்கூடிய விளைவுகளை பற்றி விரிவாக காணலாம்.
மனஅழுத்தம் மனஅழுத்தம் என்பது அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும். மருத்துவரீதியாக உடலுறவில் ஈடுபடுவது உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும்போது உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது உங்களின் மனஅழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். மனஅழுத்தம் அதிகரிப்பது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
செயல்பாட்டில் குறைவு திருப்திகரமான தாம்பத்தியத்தை விடுங்கள் நீண்டகாலம் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது உங்களின் பாலியல் திறனையே குறைத்துவிடும். உங்களுக்கு இதனை நம்புவது கடினமாக இருக்கலாம் ஆனால் அதுதான் உண்மை. குறிப்பாக ஆண்களுக்கு விறைப்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும். அதன்பின் நீங்களாவே விரும்பினாலும் பாலியல் செயல்திறன் குறைந்து விரைவில் விந்து வெளியேறிவிடும். பெண்களுக்கு உச்சக்கட்டம் ஏற்படுவதில் பிரச்சினை ஏற்படும்.
நோயெதிர்ப்பு சக்தி வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்கும். அதேபோல வலுவிழந்த நோயெதிர்ப்பு மண்டலம் பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். உடலுறவில் உச்சகட்டத்தை அடையும்போது சுரக்கும் ஹார்மோன்கள் உங்கள் உடலுக்கு பாதுகாப்பு கவசம் போன்றது. அது தடைபடும்போது நிச்சயம் உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும். உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உங்கள் துணையுடன் உறவில் ஈடுபடுவதே மிக எளிதான வழி.
புற்றுநோய் ஆண்களிடையே வேகமாக பரவி வரும் ஒரு நோய் புரோஸ்ட்ரேட் புற்றுநோயாகும். சமீபத்திய ஆய்வின்படி 100 ஆண்களில் 7 பேருக்கு புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுகிறது. இது ஏற்பட முக்கிய காரணம் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பதுதான். சீரான இடைவெளியில் உடலில் இருந்து உங்கள் உயிரணுக்களை வெளியேற்றுவது இந்த வகை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.
இரத்த அழுத்தம் உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும் ஒரு எளிய வழி உடலுறவு ஆகும். வெளியுலக அழுத்தத்தால் அதிகரிக்கும் உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உங்கள் துணையுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழித்தாலே போதும். ஆய்வுகளின்படி தொடர்ச்சியான உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு இரத்த அழுத்தம் உடலுறவில் ஈடுபடாதவர்களை விட சீராக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பயனற்றவராக உணருதல் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மனஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கும். உலகில் மிகமோசமான ஒரு உணர்வு பயனற்றவராக உணருதல், உடலுறவில் ஈடுபடாத போது நீங்கள் அப்படித்தான் உணருவீர்கள். தொடர்ந்து உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது உங்கள் வாழ்கையையே சோர்வாக மாற்றிவிடும்.
கெட்ட கனவு உடலுறவு என்பது உடலுக்கு அவசியமான ஒன்று. அது இல்லாதபோது உங்கள் தூக்கம் கெடும் மேலும் உங்களின் மோசமான இல்லற வாழ்க்கையின் அடையாளமாக வித்தியாசமான கனவுகள் தோன்றும். பெரும்பாலும் அவை உறவை பற்றிய கனவாகவே இருக்கும், பலரும் தூக்கத்திலியே உச்சகட்டத்தை அடைந்துவிடுவார்கள்.
உறவுகளில் சிக்கல் திருமண வாழ்க்கை இடையூறின்றி செல்ல இல்லறத்தில் ஈடுபடுவது அவசியமான ஒன்று. இது அவர்களுக்கு இடையேயான காதலை அதிகரிக்கும். அதிக இல்லறம் இல்லாமல் இருப்பது விவகாரத்திற்கு முக்கிய காரணமாக கருதபடுகிறது. உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது உங்களுக்குள் இருக்கும் தூரத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும். மேலும் இது உங்கள் துணையை தவறான பாதையை நோக்கி அழைத்து செல்லவும் வாய்ப்புகள் அதிகம்.
வாழ்க்கையின் மீது சலிப்பு என்ன ஒரு மோசமான வாழ்க்கை? நீங்கள் தொடர்ந்து உடலுறவில் ஈடுபடாமல் இருக்கும்போது உங்கள் மனதில் எழும் முதல் எண்ணம் இதுதான். நீண்ட காலம் உறவின்றி இருப்பது அத்தன்மை மீதான உங்கள் ஆசையை குறைக்கும். வாழ்க்கையின் மீதான இந்த சலிப்பே பின்னாளில் உங்களை விபரீதமான முடிவுகளை எடுக்க தூண்டும். இவையெல்லாம் உங்களை பயமுறுத்துவதற்கு அல்ல, உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே கூறப்படுகிறது.