சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஜலதோசம், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்பிரச்சனையால் சுவாசிக்க அனைவருமே சிரமப்படுவார்கள்.
சிறு குழந்தைகளுக்கு மூக்கடைப்பு இருந்தால் உறிஞ்சு குழலைக் கொண்டு கோழையை உறிஞ்சி எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் மூக்கடைப்பு நீங்கும்.
பெரிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மூக்கடைப்பு இருந்தால் உப்பு கலந்த நீரைக் கையில் சிறிதளவு எடுத்து மூக்கின் அருகில் வைத்து உறிஞ்ச வேண்டும். இப்படி செய்வதால் கோழையை நீக்கும்.
ஜலதோசத்தின் போது சுவாச நாசிகள் திறந்து இருக்க வேண்டும். அதனால் நீராவியை சுவாசிக்க வேண்டும். அப்போது தான் ஜலதோசத்தை கட்டுப்படுத்த முடியும்.
ஜலதோசம் உள்ளவர்கள் நெல் வேக வைக்கும் இடத்தில் இருந்தாலே ஜலதோசம் நீங்கி விடும். மேலும் கபால சளியும் குறையும். அனைத்து வீட்டிலும் உள்ள உப்பை கொண்டு சுலபமாக எளிய முறையில் மூக்கடைப்பை நீக்கலாம்.