Home சமையல் குறிப்புகள் சூப்பரான வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

சூப்பரான வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

35

Captureதேவையான பொருட்கள் :

வஞ்சிரம் மீன் (கருவாடு) – கால் கிலோ
சிறிய வெங்காயம் – இரண்டு கைபிடியளவு
தக்காளி – 2
பூண்டு – பத்து பல்
காய்ந்த மிளகாய் – ஐந்து
நல்லெண்ணெய் – ஒரு குழிகரண்டி
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கடுகு – சிறிதளவு

செய்முறை :

* தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வஞ்சிரம் மீன் கருவாடு துண்டுகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* பூண்டை ஒன்றும் பாதிகாய தட்டிச்கொள்ளவும்.

* எண்ணெய் காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.

* இதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் சுத்தம் செய்த கருவாடு துண்டுகளை சேர்த்து எண்ணெயிலேயே நன்கு வதக்கவும். ஏற்கனவே கருவாட்டில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க தேவையில்லை.

* இந்த கருவாட்டு தொக்கு சாதத்தில் போட்டு புரட்டி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

* விருப்பப்பட்டால் முருங்கைக்காய் சேர்த்து கொள்ளலாம்.