Home பாலியல் ஹெச்ஐவி பாதித்த ஆணுடன் ஆணுறை அணிந்து உடலுறவு வைக்கலாமா?

ஹெச்ஐவி பாதித்த ஆணுடன் ஆணுறை அணிந்து உடலுறவு வைக்கலாமா?

66

ஆணுறை பாதுகாப்பு:எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது. என் கணவர் ஹெச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஆணுறையைப் பயன்படுத்தித்தான் உறவுகொள்கிறோம். அப்படியிருந்தும் எனக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்பாக உறவு கொண்டும் நான் எப்படிப் பாதிக்கப்பட்டேன் என்பது புரியாமல் குழம்பித் தவிக்கிறேன். தெளிவுபடுத்த முடியுமா?

ஆணுறை இல்லாத மனிதன் அரை மனிதன் என்று சொல்லும் அளவுக்கு இன்று பாலியல் நோய்களைத் தவிர்க்க ஆணுறை அவசியமாகிறது.
கணவன் மனைவியே ஆனாலும் ஆணுறை இன்றி கலவிகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தும் அளவுக்குக் கலவி வழித் தொற்றுநோய்கள் பல உள்ளன.

ஆனால் சில சமயங்களில் மட்டமான லேட்டெக்ஸால் ஆன ஆணுறையை உபயோகிக்கும் போது அதில் ஒரு பொத்தலோ, கிழிசலோ இருந்தால் திரவங்கள் கசிந்து, நோய்த் தொற்றை ஏற்படுத்திவிடுகின்றன.
இதைத் தவிர்க்க நம்பகமான தயாரிப்பாளர்களின் ஆணுறைகளைப் பயன்படுத்துவது முக்கியம்.

சில சமயங்களில் ஆணுறையை எப்படி அணிந்து கொள்வது என்று தெரியாமல் எசகு பிசகாக மாட்டிக் கொள்கிறார்கள் சிலர். இதைப் பற்றி எல்லாம் ஆலோசனை வழங்க எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ஒருங்கிணைந்த தன்னார்வ ஆற்றுப்படுத்தல் மற்றும் பரிசோதனை மையங்கள் உள்ளன. இது மாதிரியான சந்தேகங்ளுக்கு பதில் சொல்வது தான் அவர்கள் வேலையே. அதனால் தயங்காமல், கவலைப்படாமல் ஆலோசகரைத் சந்தியுங்கள்.

ஆணுறையைச் சரியாக அணியும் முறை உட்பட பல முக்கிய தகவல்களைத் தருவார்கள். அதன்படி நடந்தால் நோ பிராப்ளம்!

ஆனால், உங்களுக்கு இப்போது துரதிர்ஷ்டவசமாக ஹெச்.ஐ.வி. கிருமி தாக்குதல் ஏற்பட்டுவிட்டது என்றாலும், கவலை வேண்டாம். எதிர்ப்பு ரெட்ரோ வைரல் தெரபி என்கிற ஏ.ஆர்.டி. சிகிச்சை எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கிறது.

இந்த மருந்துகளை உட்கொண்டால் கிருமி பாதிப்பு நிலையை தவிர்த்து வரலாம். கூடவே கிருமி தாக்குதலுக்குள்ளான நபர்களை நல்வழிப்படுத்த தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றோடு இணைந்தால் வாழ்க்கை இலகுவாகும்.