இன்றைய தலைமுறையினர் சமூகவலைத்தளங்கள் மற்றும் இண்டர்நெட் கலாச்சாரத்தில் மூழ்கி செக்ஸ் வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். பிஞ்சிலேயே பழுத்த பல இளைஞர்கள், இளைஞிகளை காண முடிகின்றது. செக்ஸ் என்றால் என்ன என்பதை டீன் ஏஜிலேயே தெரிந்து கொண்டு அதில் ஈடுபட்டு பார்க்கவும் இன்றைய தலைமுறைகள் ஆர்வத்தில் உள்ளனர்.
ஆனால் செக்ஸ் உறவுகொள்ளும்போது அவர்கள் பாதுகாப்பாக ஈடுபடுகின்றார்களா? என்றால் அது கேள்விக்குறியே. முன்னெச்சரிக்கை இல்லாமல் உறவு கொள்வதால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் காண்டம் இல்லாமல் உறவு கொள்வதால் என்னென்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது என்பதை அவர்கள் தெரிந்து வைத்து கொள்வது பயன்
காண்டம்
1. காண்டம் இல்லாமல் உறவு கொள்வதால் எச்ஐவி எனப்படும் எய்ட்ஸ் நோய் வர வாய்ப்பு இருக்கிறது
2. பெண்களின் பிறப்புறுப்பில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது
3. ஆணுறுப்பு சுத்தமாக இல்லாத ஆண்களுடன் உறவு கொண்டால் பெண்களின் பிறப்புறுப்பு வைரஸால் பாதிக்கப்படும்
4. தேவையற்ற குழந்தை ஏற்படுவதை தடுக்கலாம்
5. புதிதாக ஒரு இணையுடன் காண்டம் இல்லாமல் உறவு கொள்வதினாலும் பிறப்புறுப்பில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்
எனவே பாதுகாப்பான செக்ஸ் உறவுக்கு காண்டம் மிகவும் அவசியம் என்று செக்ஸ் மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.