கருத்தரிக்காமல் இருப்பதற்கு பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுக்கும் ஓர் கருத்தடை வழி தான் காண்டம் பயன்படுத்துவது. காண்டம் பயன்படுத்துவதால் 95% கருத்தரிப்பதைத் தவிர்ப்பதோடு, 90% பாலியல் நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம் என சொல்லப்படுகிறது.
காண்டம் என்னும் கருத்தடைப் பொருளானது லாடெக்ஸ் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதோடு, ஸ்பெர்மிசைடு என்னும் பொருளால் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். கருத்தடை மாத்திரை எடுத்தால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதற்காகவே ஏராளமானோர் காண்டமைப் பயன்படுத்துகிறார்கள்.
இருப்பினும் நிறைய பேர் காண்டம் பயன்படுத்தி, அதனால் கடுமையான அலர்ஜிக்குள்ளாகி அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு காண்டமில் உள்ள லாடெக்ஸ் மற்றும் ஸ்பெர்மிசைடு என்னும் பொருளும் தான் காரணம்.
இங்கு காண்டம் பயன்படுத்தியதால் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அசாதாரண அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்தரங்க உறுப்பில் அரிப்பு காண்டம் மூலம் அலர்ஜி ஏற்பட்டிருந்தால், முதலில் அந்தரங்க உறுப்பில் மிதமானது முதல் கடுமையானது வரையான அரிப்புடன் கூடிய எரிச்சலை உணரக்கூடும்.
பிறப்புறுப்பு கொப்புளங்கள் பிறப்புறுப்புகளில் கொப்புளங்களானது லாடெக்ஸ் அல்லது ஸ்பெர்மிசைடு மூலம் ஏற்படக்கூடும். மேலும் இவ்விடத்தில் கொப்புளங்கள் வந்தால், பிறப்புறுப்பு பாதையில் வீக்கத்துடன், சிராய்ப்புகளும் இருக்கும்.
கண்களில் இருந்து நீர் வடிதல் காண்டமில் உள்ள லாடெக்ஸ் மூலம் அலர்ஜி ஏற்பட்டிருந்தால், இரத்தத்தின் மூலம் பார்வை நரம்புகளை அடைந்து, கண்களில் இருந்து நீர் வடியவோ அல்லது கண்களில் எரிச்சல்களையோ ஏற்படுத்தும்.
சரும அரிப்பு காண்டம் மூலம் ஏற்படும் அலர்ஜியானது, அந்தரங்க உறுப்பில் மட்டுமின்றி, உடலின் மற்ற பகுதிகளிலும் அரிப்புக்களுடன் படையையும் ஏற்படுத்தும்.
குறைந்த இரத்த அழுத்தம் காண்டம் மூலம் அலர்ஜி ஏற்படுமாயின் சில நேரங்களில், அதன் காரணமாக இரத்த அழுத்தம் குறையும். இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.
குமட்டல் லாடெக்ஸ் அல்லது ஸ்பெர்மிசைடு மூலம் ஏற்படும் அலர்ஜியினால், குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் போன்றவை கூட ஏற்படும். எனவே எப்போதும் குமட்டல் மற்றும் தலைச்சுற்றலை சாதாரணமாக நினைக்காதீர்கள்.
மார்பு இறுக்கம் காண்டம் மூலம் அலர்ஜியானது தீவிரமாக இருந்தால், அதனால் மார்பகங்களில் ஒருவித இறுக்கத்தை ஏற்பட்டு, மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்திக்கக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.