ஹார்மோன்களை அடிப்படையாக கொண்ட ஒரு பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பக்க விளைவுகளுடன் கிடைத்தால் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தினாலும், பெரும்பாலான விளைவுகள் தீவிரமானவைகளும் அல்ல.
இவ்விளைவுகளில் சில நல்லவையாகவும், சில விளைவுகள் சரியாகவோ அல்லது ஆபத்தானதாகவோ இருக்கும். கர்ப்பத்தை தடுக்கும் என்ற காரணங்களால் பிறப்பை கட்டுப்படுத்தும் விஷயம் பயனுள்ளதாகவே உள்ளது. ஆனால், இதை செய்யும் முன் அவற்றால் சாதாரணமாக ஏற்படும் பக்க விளைவுகளை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
குமட்டல், பாலுணர்வில் மாற்றங்கள், எடை கூடுதல், தலைவலி, சோர்வு, மார்பகங்கள் வீங்குதல், மாதவிடாயின் போது குறைந்த அளவே இரத்தப்போக்கு ஏற்படுதல், மாதவிடாய் சரியாக வராதிருத்தல், மென்மையான மாதவிடாய், அதிகமான இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்புகள், திரவங்களின் தேக்கம், மலச்சிக்கல் அல்லது உப்புசமடைதல், கருமுட்டைகள் பெரிதாகுதல், பிறப்புறுப்பிலிருந்து வெளியேறுவதில் மாற்றங்கள், முடி குறைதல், எலும்புகளின் அடர்த்தி குறைதல் மற்றும் மனநிலை மாற்றங்கள் என பல்வேறு பக்க விளைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனினும், இந்த பக்க விளைவுகள் சில மாதங்களில் குறையத் தொடங்குகின்றன.
உங்களுடைய மாதவிடாய் பருவத்தை சரியாக வரவிடாமலும், மென்மையாகவோ அல்லது வர விடாமலோ செய்வதால் பிறப்பு கட்டுப்பாடு வழிமுறைகளை யாரும் இரசிப்பதில்லை. மேலும், சில வழிமுறைகளை பயன்படுத்திய பின்னர் இரத்தக்கசிவுகள் கூட பக்க விளைவுகளாக திடீரென ஏற்படும்.
மாத்திரைகளை பயன்படுத்துவது பொதுவாகவே ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தடை சாதனங்களாக இருந்தாலும் அவற்றால் வரும் பக்க விளைவுகள் நீண்ட பட்டியலை உருவாக்குகின்றன. அது போன்று நம்மை பயமுறுத்தும் பக்க விளைவுகளைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.
தலைவலி
நீங்கள் மருத்துவ காரணங்களுக்காக கருத்தடை சாதனங்களை பயன்படுத்தினாலும் அவற்றை வகை தொகையில்லாமல் பயன்படுத்த வேண்டாம். குமட்டலும், தலைவலியும் தான் மிகவும் சாதாரணமாக ஏற்படும் பக்க விளைவுகளாகும். மாத்திரைகளில் கலந்திருக்கும் ஈஸ்ட்ரோஜன்கள் எளிதில் வெளியெறாமல் இருந்து, வேறொரு நிலைக்கு உருமாறுவதன் காரணமாகவே இந்த பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
குமட்டல்
கருத்தடை மாத்திரைகள் மற்றும் மருந்துகள் ஹார்மோன்களை அடிப்படையாக கொண்டவையாகும். இவற்றில் கர்ப்பமடைவதை தடுக்கக் கூடிய அளவிற்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோகெஸ்டெரோன் ஆகியவை உள்ளன. இந்த மாத்திரைகளை சாப்பிடும் எந்தவொரு பெண்ணுக்கும் சாதாரண பிறப்பு கட்டுப்பாட்டு பக்க விளைவுகளோ அல்லது நீண்ட கால அளவிலான பக்க விளைவுகளோ வரும். ஹார்மோன்களை சேர்த்து பிறப்பினை கட்டுப்படுத்துவதால், உங்களுடைய மாத்திரைகள் பக்கை விளைவுகளை கண்டிப்பாக உண்டாக்குகின்றன.
இயல்புக்கு மாறான இரத்தக் கசிவு
பெரும்பாலான பெண்கள் வாய்வழியாக கருத்தடை சாதனங்களை முதலில் பயன்படுத்தும் போது மாதவிடாய் ஏற்படும் இடைப்பட்ட காலங்களில் இயல்புக்கு மாறான வகையில் இரத்தக் கசிவு ஏற்படுவது போன்ற பக்க விளைவுகளை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக வெள்ளைப்படுதல் மற்றும் மிகவும் அதிகமான அளவிற்கு இரத்தப்போக்கு ஆகியவற்றை மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலங்களில் எதிர்கொள்வீர்கள்.
மார்பகங்களின் மென்மைத்தன்மை
நீங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த துவங்கிய பின்னர் மார்பகங்களின் மென்மைத்தன்மை அல்லது அளவு அதிகரிக்கும். காப்ஃபைன் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்வதை குறைப்பதாலும், நல்ல உள்ளாடையை அணிவதாலும் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். நீண்ட நாட்களாகவே இது போன்ற கருத்தடை பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் பெண்கள், தங்களுக்கு வரும் மார்பக வலி, அதிக இரத்த அழுத்தம், மார்பக புற்றுநோய் வளர்தல், மூச்சு விடும் போது வலித்தல், மோசமான அடிவயிற்று வலி மற்றும் பார்வையில் திடீரென குறைபாடுகள் ஏற்படுதல் போன்ற விஷயங்களை உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பாலுணர்வில் நாட்டமின்மை
ஹார்மோன்களை அடிப்படையாக கொண்ட கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதால் வரும் பக்க விளைவுகளில் ஒன்றாக பாலுணர்வில் உள்ள நாட்டம் குறைவதை சொல்லலாம்.
ஆகவே மிகவும் சாதாரணமாக எதிர் கொள்ள வேண்டிய கருத்தடை பிரச்சனைகளான இவற்றை, கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு முன்னதாக நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.