Home சூடான செய்திகள் உங்களுக்கு அடிக்கடி அந்தரங்க கனவு வருகிறதா? இதுதான் காரணம்

உங்களுக்கு அடிக்கடி அந்தரங்க கனவு வருகிறதா? இதுதான் காரணம்

127

கனா” படம் பார்த்த பலருக்கு கனவுகள் மீது இன்னும் ஆழமான எண்ணம் வந்திருக்கும். கனவுகள் என்ன அவ்வளவு உறுதியானதா..? என்று கேட்டால் “ஆமாம்” என்பதே பதிலாக வரும். சிலருக்கு திகில் கனவுகள் வரும், சிலருக்கு சாப்பிடுவது போன்ற கனவு வரும், சிலருக்கு ஒருவருடன் உடலுறவு வைத்து கொள்வது போன்ற கனவுகள் வரும்… இப்படி கனவுகளுக்குள் பலவிதங்கள் உள்ளன.

ஆனால் இவை ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது என இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்றனர். கனவு உலகத்துக்கும் நமக்கும் மிக பெரிய இணைப்பு உள்ளதாம். இதை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதையும், உங்களுக்கு ஏற்பட போகிற பாதிப்புகளையும், அதற்கான சரியான அர்த்தத்தையும் கண்டுபிடித்து விடலாமாம். வாங்க, எப்படினு தெரிஞ்சிப்போம்.

அர்த்தம் தருமா..? கனவுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு சில முக்கிய தகவல்கள் வெளி வந்துள்ளன. கனவுகள் நமது ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்த கூடியதாம். நமக்கு வருகின்ற ஒவ்வொரு கனவுகளுக்கும் பல்வேறு அர்த்தங்கள் உள்ளனவாம். பொதுவாக கனவுகள் மூளையால் உருவாக்கப்படுகின்றன. நம்மால் எளிதாக இந்த கனவில் இருந்து வெளி வரவும் முடியும்.

4 கனவா..? 6 கனவா..? நம்மில் பலர் இதை நம்ப மாட்டோம். ஆனால் இதுதான் உண்மை. பொதுவாக நம்மில் பலருக்கு ஒரு இரவில் 4 முதல் 6 கனவுகள் வருமாம். ஆனால் இவற்றில் பல நமக்கு நினைவுடன் இருக்காது. இப்படி அடிக்கடி கனவுகள் வருவதால் மனநிலை பெரிதும் பாதிக்கப்படும். மேலும், தலைவலி போன்றவையும் இதனால் ஏற்பட கூடும்.

துரத்தும் கனவுகளா..? பலருக்கு யாரோ தன்னை துரத்துவது போன்ற கனவுகள் வரும். இது போன்ற கனவு கொஞ்சம் அபாயமானது தான். இது போன்ற கனவுகள் தொடர்ந்து வந்தால், நரம்பு மண்டலம் பெரிதும் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வகையான தாக்குதல் கொண்ட கனவுகள் நம் ஆழ் மனதையும் பாதித்து விடும்.

திகில் கனவா..? உங்களுக்கு திகிலூட்டும் கனவு வந்தால் அதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் உள்ளது. அதாவது, இது போன்ற கனவுகள் சற்றே மோசமானதாம். இவை இதய நோய்களை கூட உண்டாக்குமாம். மேலும், இதனால் மூளைக்கு செல்கின்ற ஆக்சிஜென் அளவும் குறைய கூடும்.

கொல்வது போன்ற கனவா..? 90 சதவீத மக்களுக்கு மோசமான கனவுகளே வருகிறது என ஆய்வறிக்கைகள் சொல்கிறது. யாரோ நம்மை கொல்வது போன்றோ, அல்லது நாம் யாரையோ கொல்வது போன்றோ கனவுகள் வரும். இவை நடுத்தர வயதுடையவருக்கும், வயதானவர்களுக்கும் பெரிதும் ஏற்படும். நரம்புகள் பாதிக்கப்படுவதை இந்த கனவுகள் உங்களுக்கு உணர்த்துகின்றன.

படிப்ஸ் கனவு..! பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த வகை கனவுகள் பெரும்பாலும் வர தொடங்கும். இவை அவர்களின் ஞாபக திறனை அதிகரிக்கவும் செய்யும். அதே வேளையில் மன அழுத்தத்தை கூட்டவும் செய்யும். இது அவரவரின் உளவியலை பொருத்து மாறுபடும்.

உடலுறவு கனவா..? பெரும்பாலும் இந்த வகை கனவுகள் அதிக ஆரோக்கியமானவை என்றே ஆய்வுகள் சொல்கிறது. இந்த வகை கனவுகள் நமது படைப்பாற்றலை அதிகரித்து, தனித்துவம் நிறைந்தராக காட்டுமாம். பலர் இது போன்ற கனவுகளை வெளியில் சொல்வதும் இல்லை.

பாலும் பழமும்..! உங்களுக்கு ஆரோக்கியமான கனவு வர வேண்டுமென்றால் இந்த எளிய வழியை பின்பற்றுங்கள் நண்பர்களே. அதாவது, தூங்க போகும் முன் 1 வாழை பழத்தையும், 1 கிளாஸ் பாலையும் குடித்து விட்டு தூங்கினால் இனிமையான கனவுகள் வரும். இது ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாம்.

புது மனிதர்களா..? கனவில் புதுவித மனிதர்களோ அல்லது புதுவித இடமோ வந்தால், அதற்கும் உணர்வு பூர்வமான அர்த்தம் உண்டு. அதாவது உங்களின் நிஜ வாழ்க்கையில் எதையோ பார்த்து நீங்கள் பயப்படுவதை இது குறிக்கிறது. இது ஒரு நபராக இருக்கலாம் அல்லது பிரச்சினையாக கூட இருக்கலாம்.

வண்ண வண்ண கனவுகள்..! “Colorful Dreams” என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இந்த வகை கனவுகள் ஒருவருக்கு வந்தால் அவர் அதிக நிம்மதியுடன் இருப்பார் என்று அர்த்தம். மேலும், இவை மன நிலையை எப்போதும் சாந்தமாகவே வைத்து கொள்ளுமாம்