Home குழந்தை நலம் குடும்பத்தினரால் உண்டாகும் குழந்தைகள் பாதிப்பு காரணம்

குடும்பத்தினரால் உண்டாகும் குழந்தைகள் பாதிப்பு காரணம்

63

குழந்தை நலம்:பாலினம் அல்லது பாலுறவு விருப்பம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது, இணையராகவோ அல்லது ஒரு குடும்பத்தில் உறுப்பினர்களாகவோ இருக்கின்ற, 16 அல்லது அதற்கு அதிக வயதுள்ள நபர்களிடையே, நடக்கும் கட்டுப்படுத்துகின்ற, அதிகாரத்தைப் பிரயோகிக்கின்ற, அச்சுறுத்தலாக உள்ள நடத்தை, வன்முறை அல்லது தவறான நடத்தை போன்ற நிகழ்வுகள் அல்லது அது போன்ற தொடர் நிகழ்வுகளையே குடும்ப வன்முறை அல்லது துஷ்பிரயோகம் என்கிறோம். பின்வருபவையும் இதிலடங்கும், ஆனால் இவை மட்டுமே அல்ல:

உளவியல்ரீதியான வன்முறை
உடல்ரீதியான வன்முறை
பாலியல் வன்முறை
நிதிரீதியான வன்முறை
உணர்வுரீதியான வன்முறை
குடும்ப வன்முறை என்பது, சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் கடுமையாகப் பாதிக்கின்ற ஒரு சமூகப் பிரச்சனையாகும். இதுபோன்ற துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்படும் பெரியவர்களின் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க பல அமைப்புகள் உள்ளன, இப்போது இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவது பற்றியும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. உலகளவில், 27. 5 கோடி சிறுவர்கள் வீட்டில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் சிறுவர்கள் எப்போதும் மனக்கலக்கம், பரபரப்பு, கோபம் மற்றும் பயத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பார்கள். இது குறிப்பிடத்தக்க அளவிலான உணர்வுரீதியான, உளவியல்ரீதியான அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இவர்கள் எப்போதும் தங்கள் எதிர்காலம் குறித்த கவலையோடு இருப்பார்கள்,மீண்டும் எப்போது அதுபோன்ற வன்முறை சம்பவங்கள் ஏற்படுமோ என்ற அச்சத்திலேயே இருப்பார்கள், மீண்டும் பிரச்சனை வரும்போது தங்களை அல்லது தங்கள் உடன் பிறந்தவர்களைப் பாதுகாக்க முயற்சிப்பார்கள்.

சிறுவர்கள், பல்வேறு வழிகளில் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாகலாம், அவற்றில் சில

குடும்ப வன்முறையால் நேரடியாக உடல் காயம் படுதல்
உடல் ரீதியான அல்லது பாலியல்ரீதியான வன்முறையைப் பார்ப்பது
பிற அறையில் இருந்து, உரத்த சத்தங்கள் அல்லது அச்சுறுத்தும் சத்தங்கள் கேட்பது
உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட அடையாளங்களான, உடல் சிராய்ப்புகள், கண்ணீர், உடைந்த பொருள்கள், கிழிந்த துணிகள் போன்றவற்றைப் பார்ப்பது.
வீட்டில் பதற்றமான சூழ்நிலை குறித்து உணர்ந்திருப்பது
குடும்ப வன்முறையால் குழந்தைகள் மீது ஏற்படும் தாக்கம் (

குடும்ப வன்முறையால் குழந்தைகள் பாதிக்கப்படும்போது பின்வரும் பாதகமான விளைவுகள் ஏற்படலாம்:

மனக்கலக்கம் மற்றும் மன இறுக்கம்
பெற்றோரை இழந்துவிடுவது அல்லது அவர்களைப் பிரிந்துவிடுவது குறித்து பயம்
பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுதல்
தலைவலி அல்லது வயிற்று வலி
பிரச்சனையான சூழ்நிலையை சரிசெய்ய முடியாமல் தவித்தல், மனம் வெறுத்துப் போதல்
தூக்கமின்மை மற்றும் கெட்ட கனவுகள்
துன்புறுத்தப்படுவோமோ என்று பயந்திருத்தல்
மற்ற குழந்தைகளுடன் சண்டையிடுவது
மக்களிடமிருந்து விலகுதல்
தனிமை மற்றும் தனித்திருத்தல்
மனதை ஒருமுகப்படுத்துவதில் சிரமம்
முரட்டுத்தனம்
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் நீண்டகால விளைவுகள்

பெற்றோருக்கு இடையே ஏற்படும் குடும்ப வன்முறையால், குழந்தைகள் அதிக அளவிலான உணர்வு மற்றும் உளவியல் அதிர்ச்சிகளை அனுபவிப்பார்கள். தங்கள் தந்தை தாயைத் துன்புறுத்துவதைப் பார்க்கும் குழந்தைகள், எதிர்காலத்தில் அவர்களும் அப்படி நடந்துகொள்ளலாம், தவறில்லை என்று நினைத்து அதுவே அவர்கள் மனதில் பதியவும் வாய்ப்புள்ளது. உறவில் ஒருவர் மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும், அது சரிதான் என்று நம்பத் தொடங்கிவிடுவார்கள். ஆதிக்கம் செலுத்தும் பக்கத்தை நோக்கி எளிதில் குழந்தைகள் கவரப்படுவார்கள், இதனால் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவரின் தரப்பில் அவர்கள் சேர்ந்துகொண்டு, தாயின் மீதான மரியாதையை அவர்கள் இழந்துவிட வாய்ப்புள்ளது.

இது போன்ற வன்முறையான சூழலில் வளரும் குழந்தைகள், பிரச்சனைகளைத் தீர்க்கவும் பிறரை அடிபணிய வைக்கவும் வன்முறையே எளிய தீர்வு என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்களும் வளர்ந்து பெரியவர்களானதும், தங்கள் உறவிலும் வன்முறையையே பிரயோகிக்கத் தொடங்கிவிடுவார்கள். இதுபோன்று வளரும் குழந்தைகள், மதுப் பழக்கம் அல்லது போதைப்பழக்கத்திற்கு அடிமையாகவும் சிறார் குற்றச் செயல்களில் ஈடுபடவும் அதிக வாய்ப்புள்ளது. தங்கள் தாய் தகாத முறையில் நடத்தப்படுவதைப் பார்க்கும் ஆண் குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாகும்போது, தங்கள் பெண் இணையரையும் அதே போல் நடத்த வாய்ப்புள்ளது. பெண் குழந்தைகளும், ஆண்களால் இப்படி நடத்தப்படுவதும் இயல்புதான் என அதையே ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள்.

வீட்டு வன்முறையில் குழந்தைகள் பாதிக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள சில குறிப்புகள்

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் தேவை, அவர்கள் மீது அன்பும் பாசமும் செலுத்தும் நபர்கள் நிறைந்த குடும்பம் தேவை. எனினும், கணவன் மனைவி இடையே வாக்குவாதம் அல்லது சண்டை எதுவுமே இல்லாமல் வாழ்வது நடைமுறையில் முற்றிலும் சாத்தியமில்லை. ஆனால், குடும்ப வன்முறையால் குழந்தைகள் பாதிக்கப்படாதபடி பார்த்துக்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும், அவற்றில் சில:

குழந்தைகள் முன்னிலையில் அதிகம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
அதைத் தவிர்க்க முடியாவிட்டால், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடும்போதும், மரியாதையாகவும் மதிப்புடனும் நடந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டாம்.
ஒருபோதும் குழந்தைகள் முன்னிலையில் கடுமையான, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
கத்துவதும் அலறுவதும் குழந்தைகளைப் பயமுறுத்தக்கூடும் என்பதால், கூடுமானவரை மெதுவாகவே பேச முயற்சிக்கவும்.
மது, பாலுறவு போன்றவற்றைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கவும்.
அப்படியே குழந்தைகள் முன்னிலையில் சண்டை போடுவதையே தவிர்க்க முடியாமல் போனாலும், அவர்கள் முன்னிலையில் மீண்டும் சமாதானம் ஆகிவிட மறக்க வேண்டாம். இதனால், உங்களுக்கு இடையிலான பிரச்சனை தீர்ந்து நீங்கள் மீண்டும் சேர்ந்துவிட்டீர்கள் என்று குழந்தைகள் புரிந்துகொண்டு நிம்மதியடைவார்கள்.
கணவன் மனைவிக்கு இடையே இதுபோல் வாக்குவாதங்கள் ஏற்படுவது சகஜம்தான் என்றும், அவை தீர்ந்துவிடும் என்றும் அவர்களிடம் விளக்குங்கள்.
நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போகும்போது, கூடுதல் வழிகாட்டலுக்கு குடும்ப ஆலோசனை நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறவும்.
குழந்தைகளின் வாழ்வில் வன்முறை இருக்கவே கூடாது. தெளிவான குறிக்கோள், சரியான நடவடிக்கைகள் என குழந்தைகளுக்கு நாம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி வழங்க வேண்டும்.