Home ஜல்சா சிறுவர்கள் உறவுகொள்ளும் ஆபாசப் படங்களை வெளியிட்டு கோடி கோடியாக சம்பாதித்த தம்பதியர்!

சிறுவர்கள் உறவுகொள்ளும் ஆபாசப் படங்களை வெளியிட்டு கோடி கோடியாக சம்பாதித்த தம்பதியர்!

25

Child-Pornographyபொதுவாக, இணையதளங்களுக்கான தேடல்களில் ஆண்-பெண் அந்தரங்க காட்சிகளை வெளியிடும் ஆபாச வலைத்தளங்களில் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிக நேரத்தை செலவிடுவதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள்
தெரிவிக்கின்றன.

அதிலும் குறிப்பாக, சிறுவர்-சிறுமியர் தொடர்புடைய ஆபாச வலைத்தளங்களுக்கு (child pornography ) உலகில் பல நாடுகள் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இதுபோன்ற வலைத்தளங்களுக்கு அதிக கிராக்கியும், மவுசும் உண்டு. மேற்படி காட்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து அவற்றை பார்க்கவரும் ‘ரசிகர்களிடம்’ ஏராளமான கட்டணம் சந்தாவாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையின் அருகாமையில் வசித்துவரும் ஒரு தம்பதியர் இதுபோன்ற குழந்தைகளின் பாலியல் உறவு தொடர்பான காட்சிகளை வெளியிடும் கட்டண வலைத்தளத்தை நடத்தி வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வலைத்தளத்தில் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்பவர்களின் ஐ.பி. நம்பர் மற்றும் இமெயில் ஐ.டி.க்களை மோப்பம் பிடித்த போலீசார் சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினர்.

அங்கிருந்தபடி மேற்படி ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்ய இந்த தம்பதியர் இரண்டு வலைத்தளங்களை நடத்தி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த வலைத்தளங்களை பார்வையிட வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளதாகவும், மேற்படி தொகை பெங்களூரில் உள்ள ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து, இந்த ஆபாச வலைத்தளங்களை நடத்திவந்த சித்தாத்தா வேலு மற்றும் அவரது மனைவியான பிரிசில்லா மார்கரெச் தன்ராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.