பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கட்டாயமாக சொல்லிக் கொடுக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவற்றை முறையாகக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தாலே போதும், குழந்தைகள் தங்களுடைய எதிர்காலத்தை மிக அழகாகப் புரிந்து குறிக்கோளை நிறைவேற்ற முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
அப்படி குழந்தைகளுக்கு என்னென்ன விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்?
நம்மிடம் உள்ள தோற்றம், நிறம், அழகு, செயல், அறிவு, குடும்பம், வாழ்க்கை என்று இவை அனைத்தையும் நாம் நேசிக்க வேண்டும். தன்னைப் பற்றி நாமே இழிவாக கருதக் கூடாது. என்பதை முதலில் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.
குழந்தைகளை நிறைய பயணிக்கச் செய்ய வேண்டும். பயணங்களின் போது, குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகரிக்கும்.
நல்ல நண்பர்களை வாழ்க்கையில் இருக்க வேண்டும். நல்ல நண்பர்கள் இருந்தால் தான் நாமும் நன்றாக இருக்க முடியும் என்பதை குழந்தைக்கு நன்கு புரிய வைக்க வேண்டும்.
ஒருவரின் வாழ்க்கையில் குறிக்கோள் என்பது மிகவும் அவசியம். அந்த குறிக்கோளை நோக்கி நாம் பயணிக்கும் போது, நம்முடைய வாழ்வில் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.