சிறுமிகள் அதிக அளவில் விபச்சாரத்தில் ஈடுபடுவது பலரையும் கவலை கொள்ள வைத்துள்ளது.
ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகே தற்போது விபச்சாரம் அதிகரித்துள்ளது மனித உரிமை ஆர்வலர்களையும் சிறார் நல விரும்பிகளையும் கவலை கொள்ள வைத்துள்ளது. ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகே பிஆர் 116 என்ற நெடுஞ்சாலைதான் இந்த விபச்சாரத் தொழிலின் தலைமையகம் போல காணப்படுகிறது. இந்த சாலையானது, ஒலிம்பிக் கிராமத்திலிருந்து சரியாக 50 நிமிட தூரத்தில் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் புத்தம் புதிதாக கட்டப்பட்ட ஸ்டேடியங்கள் பளிச்சென ஜொலிக்கின்றன.
பிரேசலின் மிக நீளமான இந்த நெடுஞ்சாலை தலைநகர் ரியோவிலிருந்து பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரான சாவோ பாலோ வரை 4600 கிலோமீட்டர் நீண்டு இருக்கிறது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால், இந்த சாலைக்கு மரணச் சாலை என்று இன்னொரு பெயரும் உண்டு. இந்த சாலையில் 262 இடங்களில் விபச்சாரம் நடக்கிறது. 9 வயது சிறுமிகள் முதல் பெரிய பெண்கள் வரை இந்த சாலையில் விபச்சாரத்திற்காக காத்து இருக்கின்றனர். இந்த பெண்களை வீட்டுக்கு கூட்டிச் செல்வோரும் உண்டு.
வழக்கமாக இவர்கள் லாரி டிரைவர்களைத்தான் குறி வைப்பார்கள். தற்போது ஒலிம்பிக் களை கட்டியிருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கும் வலை விரிக்கின்றனர். பலர் குடும்பத்தோடு விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அந்த அளவுக்கு இங்கு வறுமை வாட்டி வதைக்கிறது. அரசுத் தரப்பில் இவர்களின் வறுமையைப் போக்க எந்த வழியும் செய்யாததால் இவர்களையும் விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்து தடுக்க முடியாமலும், கட்டுப்படுத்த முடியாமலும் உள்ளதாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.