Home குழந்தை நலம் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க 10 வழிகள் இதோ..

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க 10 வழிகள் இதோ..

14

படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது குழந்தைகளுக்கு தர்மசங்கடமான ஒன்றாக இருந்தாலும் அது வழக்கமான ஒன்றே ஆகும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 20% மற்றும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 10% படுக்கையில் சிறுநீர் கழிக்கிறார்கள் என்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் கூறுகிறது. பல குழந்தைகள் இதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள்.

1) குற்றம் சுமத்த கூடாது:

படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது சகஜமான ஒன்று. உங்கள் குழந்தை தர்மசங்கடமாக உணர்ந்து உங்களிடம் உதவி கேட்டாலொழிய அதை பற்றி நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். குழந்தைகள் வழக்கமாக அதிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள். நீங்கள் அவர்களை குறை கூறவோ அல்லது அவர்களே அவர்கள் குறித்து குறை கூறவோ அனுமதிக்க கூடாது. இதை சேர்ந்து சரி செய்ய வேண்டும்.

2) கிண்டல் செய்ய கூடாது:

படுக்கையில் சிறுநீர் கழிப்பது குறித்து குழந்தைகளை கிண்டல் செய்ய கூடாது. அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மாறாக கிண்டல் செய்தல் அவர்களின் தன்னம்பிக்கை குறையும். நடவடிக்கை மற்றும் அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படும்.

3) படுக்க செல்வதற்கு முன் கழிவறையை உபயோகிக்க சொல்லுங்கள்:

உறங்க செல்வதற்கு முன் குழந்தைகளை சிறுநீர் கழித்துவிட்டு உறங்க சொல்லுங்கள். இதனால் படுக்கையில் சிறுநீர் கழிப்பது குறையும்.

4) மாய்ஸ்டர் அலாரம் வாங்கலாம்:

மாய்ஸ்டர் அலாரம் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாகும். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் அலாரம் அடிக்க ஆரம்பித்து விடும். இது படுக்கையில் உங்கள் குழந்தை சிறுநீர் கழிப்பதை தடுக்காது. ஆனால், அவர்கள் விரைவில் எழ எழ படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நின்றுவிடும்.

5) காலண்டர் குறிப்பு:

காலண்டரில் எந்த எந்த நாட்களில் உங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கிறார், எப்போது கழிப்பதில்லை என குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அவர் படுக்கையில் சிறுநீர் கழிக்காத நாட்களை காட்டி அவர்களுக்கு ஊக்கமளிக்கலாம்.

6) அதிக திரவங்கள் மாலை வேளையில் பருக வேண்டாம்:

குறிப்பாக இரவு உணவிற்கு பிறகு அதிக திரவங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதனால் படுக்கையில் சிறுநீர் கழிக்க மாட்டார்கள்.

7) இரவில் எழுப்பலாம்:

இரவில் குழந்தைகளை கழிவறையை பயன்படுத்த எழுப்பலாம். இரவு முழுவதும் சிறுநீர் கழிக்காமல் இருப்பதற்கு பதிலாக, இரவில் எழுப்பி அவர்களை கழிவறையில் சிறுநீர் கழிக்க சொல்லலாம்.

8) தண்ணீர் உறிஞ்சாத ஷீட்கள்:

தண்ணீர் உறிஞ்சாத ஷீட்கள் சுத்தம் செய்வதற்கு எளிதாக இருக்கும்.

9) படுக்கையில் சிறுநீர் கழிக்காத நாட்களில் குழந்தைகளுக்கு பரிசளிக்கலாம்:

குழந்தைகள் எப்போது படுக்கையில் சிறுநீர் கழிப்பதில்லை என்று நீங்கள் காலண்டரில் குறிக்கலாம் என்று முன்பு கூறினோம். அந்த நாட்களில் அவர்களுக்கு பரிசாக அவர்களை பூங்காவிற்கு அழைத்து செல்வது, அல்லது குழந்தைகளுக்கு பிடித்தமானவற்றை செய்வது போன்ற செயல்கள் அவர்களுக்கு ஊக்கமளிக்கும்.

10) மருத்துவரை அணுகுங்கள்:

மேற்சொன்ன எந்த வழிமுறைகளும் ஒத்து வரவில்லை எனில், மருத்துவரை அனுகுங்கள்.

மருத்துவரை பார்ப்பதற்கான வழிமுறைகள்:

– உங்கள் குழந்தைக்கு 6-7 வயதான பொழுதும் படுக்கையில் சிறுநீர் கழிப்பது

– உங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிப்பது குறித்து வருத்தப்பட்டால்; 6 வயதிற்கு குறைவாக இருந்தாலும் சரி

– உங்கள் குழந்தை பல நாட்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்து, மீண்டும் அதை செய்ய ஆரம்பித்தால் மருத்துவரை பார்க்கவும்.