பாஸ்மதி அரிசி – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
மெலிதாக நறுக்கிய (முட்டைக்கோஸ் – 1/2 கப்,
கேரட் – 1/4 கப்),
மெலிதாக நீளவாக்கில் நறுக்கிய முளைக்கீரைத்தண்டு – 1/4 கப்,
பச்சைமிளகாய் – 2,
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய மல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாஸ்மதி அரிசியை 2 கப் நீர் விட்டு உதிரி உதிராக வேக விடவும். அடிகனமான கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு முட்டைக்கோஸ், கேரட் வதக்கி, நறுக்கிய பச்சை மிளகாயை வதக்கி, முளைக்கீரைத் தண்டை வதக்கி உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதில் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து இறக்கி உதிரியான சாதத்தைச் சேர்த்துக் கிளறி மிளகுத்தூள், மல்லித்தழை சேர்க்கவும். நன்றாகக் கலந்து விடவும். ஃபிரைடு ரைஸ் ரெடி.