Home சமையல் குறிப்புகள் குழந்தைகளின் விருப்பமான சிக்கன் பாப் கார்ன்

குழந்தைகளின் விருப்பமான சிக்கன் பாப் கார்ன்

19

சீக்கரத்தில் தயார் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ரெசிபிதான் சிக்கன் பாப்கார்ன். இதை சாப்பிட இன்னும் சாப்பிடலாம் எனத் தோன்றும். இத்தகைய கோழிக்கறி பாப்கார்ன் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஊற வைக்க:
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு – சுவைக்கேற்ப

மைதா மாவு- 3/4 கப்
மோர் – 1/2 கப்
உப்பு, ரொட்டித்துகள் – சுவைக்கேற்ப

செய்முறை

சதைப்பகுதியான கோழிக்கறியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் கோழிக்கறி துண்டு, மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒன்றாக கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

மசாலா கலந்து ஊற வைத்த கோழிக்கறி துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மைதா மாவில் பிரட்டி மோரில் மூழ்கி எடுத்து ரொட்டித்துகளில் நன்கு பிரட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கோழிக்கறி துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சுவையான கோழிக்கறி பாப் கார்ன் ரெடி!