Home ஆரோக்கியம் பொது மருத்துவம் கழுத்து வலி வந்தால் நடை கூட மாறும்!

கழுத்து வலி வந்தால் நடை கூட மாறும்!

23

கழுத்து வலி வந்தவர்களுக்கு நடைகூட மாறிப்போகும் என்று கூறுகிறார் டாக்டர்

பலருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம், குடிப்பழக்கம், நரம்புத்தளர்ச்சி போன்ற விஷயங்களால் கழுத்து நரம்புகள் பிரச்சினைக்கு உள்ளாகும். இதனால் கழுத்து வலிதான் வரவேண்டும் என்பதில்லை. கால், கைகளில் கூட அதிக வலி அவஸ்தையை உணர முடியும். சிலருக்கு வலி இல்லாமலே நடை மாறிப்போகும்.

இவர்களுக்கு வலியே இல்லாமல் நடை மாறிப்போனது என்று சொல்ல முடியாது, முதலில் கழுத்தில் வலி இருந்திருக்கும். அல்லது கை,கால்கள் வலித்திருந்திருக்கும். இந்த வலி என்பது நீங்கள் மருத்துவரை அணுகி உடல்நிலையை சரி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், மனிதர்கள் இந்த வலியை அலட்சியம் செய்து விடுவதால் வலி மரத்துப் போய், நடையில் மாற்றம் ஏற்பட்டு விடும். இது மிகவும் ஆபத்தான நிலை.

எனவே, கழுத்தில் வலி என்று வரும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதற்கு மாற்று மருத்துவம் என்பதும் சரியாகாது. அலோபதி மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும். உடனடியாக கழுத்தில் எக்ஸ்ரே எடுப்பார்கள். அடுத்து எம்ஆர்ஐ ஸ்கேனும் எடுப்பார்கள். இந்த ஸ்கேன் எடுப்பதன் மூலம் தலையில் உடல் உறுப்புக்களில் எந்த பாகத்துக்கு செல்லும் நரம்புகள் பாதிப்படைந்து இருக்கிறது என்பது தெரிய வரும்.

பிறகு, அதற்கு ஏற்றால் போல உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அழுந்திக் கிடக்கும் நரம்புகளை விலக்கி விட்டு, ஃப்ரீ செய்து விடுவார்கள். தேவைபட்டால் எலும்புகளுக்கு ஸ்க்ரூ பொருத்தியும் விடுவார்கள். இதில் பயம் ஒன்றும் இல்லை. இந்த அறுவை சிகிச்சை கழுத்தின் பின்பகுதி, அல்லது முன்பகுதியில் செய்யப் படும் என்றாலும் பயம் ஒன்றும் இல்லை. இந்த அறுவை சிகிச்சை செய்த அடுத்த நாளே உங்களது பிரச்சனை சரியாகி, நீங்கள் முன்பு போல இருப்பீர்கள் என்று கூறிவிட முடியாது. நீங்கள் ரெக்கவர் ஆக கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகும் என்றாலும்,நீங்கள் ரெக்கவர் ஆகிவிடுவீர்கள் என்பதுதான் உண்மை.